09 December 2010

ரொம்ப முக்கியம் இப்போ..

"அண்ணாச்சி, சௌக்கியமா இருக்கியளா?"

"என்னடே! நீ எப்படி இருக்க?"

"நல்லா இருக்கேன் அண்ணாச்சி உங்க புண்ணீயத்துல"

"இப்படி அடுத்தவன் புண்ணியத்திலயே கடைசி வரைக்கும் காலத்தைக் கடத்துங்கடே"

"என்ன செய்யச் சொல்லுதிய அண்ணாச்சி? நாமெல்லாம் பாவப்பட்ட ஜென்மம்லா?!"

"எலே! என்ன இதுக்கே இப்படி அலுத்துக்கிடுத? உலகத்துல உன்னை விட பாவப்பட்டவன் எத்தனை பேரு இருக்கான்னு யோசிச்சுப் பாருடே!அப்ப நீ எவ்வளவு பெரிய அதிர்ஷ்ட சாலின்னு உனக்கே தெரியும்?"

"என்னத்த அண்ணாச்சி சொல்லுதிய?"

"எலே! நீ தமிழ்ப் பதிவெல்லாம் படிக்கியா?"

"என்னத்துக்கு? நான் கொஞ்சம் நல்லா இருக்கது கூட உங்களுக்குப் புடிக்கலையாக்கும்? எதுக்கு இப்ப அதப் பத்திக் கேக்கிய?"

"ஏன் கேக்கம்னா, அங்குன நம்மூருகாரப் பய ஒருத்தன் ஆறு வருஷமா எழுதுதாண்டே! என்னத்த எழுதுதோம்னே தெரியாம ஒருத்தன் ஆறு வருஷமா எழுதுததைப் படிக்குறவங்களப் பத்தி யோசிச்சுப் பாருல மக்கா! அப்ப தெரியும் உன்னை விட பாவப்பட்ட ஜென்மங்களும் இருக்குன்னு"

"அப்ப இந்தக் கொடுமை தொடங்கி இன்னைக்கு ஏழாவது வருசத் துவக்கமா? அடக் கடவுளே? யாரு அண்ணாச்சி அந்தக் கொடுமைக்கார பய?"

"அதாம்டே நம்ம சாத்தான்குளத்துக்காரப் பய இருக்காம்லாடே! ஊரு பேரைக் கெடுக்குததுக்குன்னே எழுதிக்கிட்டு கெடக்கான் பாத்துக்க. அவங்கப்பா அம்மா மேல என்ன கோவமோ தெரியல. டிசம்பர் ஒம்பதாம் தேதி அவுக கல்யாண நாளாம். அவங்க கல்யாண நாளும் அதுவுமால்லா பதிவு தொடங்குறதுன்னு ஒரு அராஜக முடிவெடுத்திருக்கான்?!"

"'பேரு சொல்லுத புள்ளையா இல்லாம போனாலும் பேரைக் கெடுக்காத தொல்லையாவது இருந்து தொலைடே!ன்னு அவன் கிட்ட சொல்ல வேண்டியதுதானே?"

"அங்கதாம்ல மக்கா பிரச்னையே இருக்கு?"

"என்ன பிரச்னை.அவன் ஒரு முடிவெடுத்துட்டா அவன் பேச்சை அவனே கேக்க மாட்டானாம்ல"

"அப்படின்னா "இனிமே தொடர்ந்து பதிவை எழுதுறேண்டே!"ன்னு முடிவெடுக்கச் சொல்லுங்க. அப்படியாவது அவன் பேச்சை அவனே கேட்காம எழுதாம இருக்கானான்னு பார்க்கலாம்"

"எனக்கும் ஆசைதான். ஆனா, ஆசைப்பட்டதெல்லாம் நடக்கவா போவுது?"

*****

இதுவும் பழைய பதிவுதான். 2004ஆம் ஆண்டில் துவங்கிய கோட்டித்தனம் இன்னமும் முடியாமல் தொடர்கிறது. இடைப்பட்ட காலத்தில் சம்பாதித்த, கற்றுக் கொண்ட, இழந்த, பெற்ற விசயங்கள் தாராளம். ஏராளம்.

// அறிவுபூர்வமா, ஆக்க பூர்வமா, இலக்கிய சாம்பார்,ரசம் எல்லாம் சொட்டும் வகையில் எழுதிட மாட்டேங்குற ஒரே ஒரு உத்தரவாதத்தை மட்டும் என்னால உத்தரவாதமாத் தர முடியும். அதனால பயப்படாதீங்க!! //

இதுதான் என் வலைப்பூவை துவங்கியபோது நான் மக்களுக்களித்த வாக்குறுதி அதை எப்போதும் தொடர்வேன் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறேன்.

நல்லா இருங்கடே!!

42 comments:

ILA(@)இளா said...

vaazthukal annaachi!

காலப் பறவை said...

வாழ்த்துக்கள் அண்ணாச்சி

சென்ஷி said...

வாழ்த்துள் அண்ணாச்சி :)

விருந்து இன்னைக்கா... நாளைக்கா?!

துளசி கோபால் said...

ஆஹா......

ஆரம்பிச்ச நாளை நம்ம வாழ்க்கையில் நடந்த நல்ல சம்பவத்தோடு மூளையில் முடிச்சுப்போட்டு வச்சுக்கலைன்னா...
பதிவு போதையில் மறந்துவோம்:-))))

உங்க பெற்றோருக்கு எங்கள் அன்பான இனிய வாழ்த்து(க்)கள்.

ஆறு முடிச்சு ஏழுக்குப் போகும் சாத்தான்குளத்துக்கும் எங்கள் ஆசிகள்.

ரவிச்சந்திரன் said...

வாழ்த்துள் அண்ணாச்சி!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாழ்த்துகள் அண்ணாச்சி

எம்.எம்.அப்துல்லா said...

வாழ்த்துகள் அண்ணாச்சி. ஒருக்கா மெட்றாசுக்கு வந்து வெரசா ஒரு டிரீட் குடுத்துட்டு போங்க.

ரிஷபன்Meena said...

வாழ்த்துக்கள்

Mohamed Faaique said...

வாழ்த்துகள் அண்ணாச்சி

அகமது சுபைர் said...

வாழ்த்துகள் அண்ணாச்சி :)

நாஞ்சில் பிரதாப்™ said...

வாழ்த்துகள் அண்ணாச்சி

தமிழ் குழந்தை said...

வாழ்த்துகள்

ஆதிமூலகிருஷ்ணன் said...

என்னே உயர்ந்த சிந்தனை, என்னே வாக்குறுதி. நீங்கதாம்ணே எங்களுக்கு வழிகாட்டி. அவ்வ்வ்..

ஜோ/Joe said...

வாழ்த்துகள் :)

கோபிநாத் said...

அண்ணாச்சிஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

வாழ்த்துக்கள் ;)

ஜாக்கி சேகர் said...

வாழ்த்துக்கள் அண்ணாச்சி.. உங்க சேவை நாட்டுக்கு தேவை..

ஹரிஸ் said...

வாழ்த்துகள் அண்ணாச்சி..

muchanthi said...

வாழ்த்துக்கள் அண்ணாச்சி , அப்ப அப்ப யாதவது எழுதுகிறது பய புள்ளைகள் எல்லாம் காத்து கெடக்குதில!!!!

Dubukku said...

எலே எல்லாரும் கையத்தட்டுங்கலே...
வாழ்த்துகள் அண்ணாச்சி

காவேரி கணேஷ் said...

என்னா ஒரு வில்லதனம்.

வாழ்த்துக்கள் அண்ணாச்சி.

ஆயில்யன் said...

வாழ்த்துகள் அண்ணாச்சி :)

வல்லிசிம்ஹன் said...

மனம் நிறைந்த வாழ்த்துகள்.
நான் துபாய் வரும்போது விருந்து வாங்கிக்கறேன்:)

தஞ்சாவூரான் said...

ஏழுக்கு வாழ்த்துக்கள்...

koothanalluran said...

வாழ்த்துக்கள் ஆசிப்

இனிமேயாவது உருப்படியா தொடருமா இல்லே பெண்களின் பிரசவ நேர வைராக்கியம் போலவா இதுவும்

Anonymous said...

"அதாம்டே நம்ம சாத்தான்குளத்துக்காரப் பய இருக்காம்லாடே! ஊரு பேரைக் கெடுக்குததுக்குன்னே எழுதிக்கிட்டு கெடக்கான் பாத்துக்க."

அதுலே அவம் தொல்லை பத்தலயின்னு அவம் புள்ளய வேற கெடுத்து வச்சிருக்காம்ல.

வாழ்த்துக்கள் அண்ணாச்சி
அப்படியே "Burj Al Arab"ல ச்சும்மா ஒரு ”டீ பண்ணு” வாங்கி கொடுத்தாவது ஒரு ட்ரீட்டு கொடுத்தா நல்லாருக்கும்.

By
Haji
Dubai

கார்த்திக் said...

வாழ்த்துகள் அண்ணாச்சி

Sukumar Swaminathan said...

வாழ்த்துக்கள்...

Hari said...

congrats...

http://hari11888.blogspot.com

மாணவன் said...

வணக்கம் நண்பரே, உங்கள் வலைத்தளத்தை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் நன்றி!

viji said...

வலையுலக சிறுவனின் வாழ்த்துக்கள்...
http://buildappu.blogspot.com/2011/03/3.html

Tamil Movies said...

நல்ல கருத்து :)

PUTHIYATHENRAL said...

its very good article, please go to visit www.sinthikkavum.net

http://www.sinthikkavum.net/2011/05/blog-post_7731.html

Lakshmi said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன். நேரம்
கிடைக்கும் போது பாருங்கோ.

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_9552.html

Anonymous said...

annaachi,
when'll u release ur 1st post of yr 2011?

புலவர் சா இராமாநுசம் said...

வணக்கம் வந்தீர் முதற்கண்-நல்
வாழ்த்தினைத் தந்தேன் அதற்கே

அன்புடன்
புலவர் சா இராமாநுசம்

புலவர் சா இராமாநுசம் said...

வணக்கம்! வாழ்த்து!
வருக! வருக! மீண்டும் வருக!
கருத்துரை தருக!
நன்றி!
புலவர் சா இராமாநுசம்

விமலன் said...

நல்லபதிவு.வாழ்த்துக்கள்.நல்லபதிவு.வாழ்த்துக்கள்.

Rishvan said...

Congrats...

www.suresh-tamilkavithai.blogspot.com

சீனுவாசன்.கு said...

நம்ம சைட்டுக்கு வாங்க!
தளத்துல இணைச்சுகிடுங்க!
உங்க கருத்த சொல்லுங்க!
நல்லா பழகுவோம்!...

தருமி said...

அடுத்த பதிவு அடுத்த மாதம் 9-ம் தேதியா ..? வருசத்துக்கு ஒண்ணு!

ராம் said...

அண்ணே இப்பல்லாம் நீங்க எழுதறதே இல்ல, ரொம்ப பிசியா? தங்கள் அப்பா அப்துல் ஜாபர் இந்த வார ராணியில் கிரிக்கெட் கட்டுரை படித்ததும் உங்க ஞாபகம் வந்தது. வீட்ல எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க அண்ணே.

நன்றி
ராம்
சென்னை

என்றும் இனியவன் said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தாங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.

LinkWithin

Blog Widget by LinkWithin