04 October 2010

எந்திரன் ரசிகர்களுக்கு சமர்ப்பணம்

எங்கு பார்த்தாலும் எப்படிப் பார்த்தாலும் எந்திரன்.
வழக்கம் போல அயோத்யா போன்ற முக்கியமனா விசயங்களைக் கூட மறக்கடித்து மழுங்கடித்து இதைப்பார்க்காவிட்டால் வாழ்க்கையே முடிந்து போய்விடுமென்ற பிரமையில் வாழ்பவர்களுக்கு மத்தியில் நானும் எந்திரன் பார்க்க நேர்ந்தது

படத்தை விட படம் வருவதற்கு முன்னரும் வந்த பின்னரும் உருவாக்கப்பட்ட பிம்பங்கள் தந்த எரிச்சலே மிஞ்சியிருந்தது. வட இந்திய ஊடகங்கள் வேறு கடவுளையும் ரஜனியையும் கேள்வி கேட்க முடியாதென்று குழந்தைத்தனமாக உளறியிருந்தது.

கடவுளாகவே இருந்தால் என்ன?
குற்றமென்று கண்டால் கேள்வி கேட்போமென்று கேட்டிருக்கிறார் அபி.
நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் சுட்டிக் காட்டும் தமிழ்ப்பரம்பரையில் வந்த அபியின் எந்திரன் பார்வை இங்கே உங்களுக்காக.

எல்லா எந்திரன் ரசிகர்களுக்கும் சமர்ப்பணம் :-)

5 பின்னூட்டங்கள்:

கோபிநாத் said...

\சுட்டிக் காட்டும் தமிழ்ப்பரம்பரையில் வந்த அபியின் எந்திரன் பார்வை இங்கே உங்களுக்காக.\\

அண்ணாச்சி அந்த கட்டுரையின் தமிழாக்கம் எப்போது வரும் ! ? ;))

Anonymous said...

//வழக்கம் போல அயோத்யா போன்ற முக்கியமனா விசயங்களைக் கூட மறக்கடித்து மழுங்கடித்து //

அயோத்யா, பார்ப்பனர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் முக்கியமாக இருக்கலாம், ஆனா எங்களுக்கு வேற பொழப்பு இருக்கு..அதுல எந்திரனும் இருக்கு. அயோத்யாவில் யார் ஒன்னுக்கு அடித்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை. நாங்கள் தமிழர்கள்.

Anonymous said...

//அயோத்யா, பார்ப்பனர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் முக்கியமாக இருக்கலாம், ஆனா எங்களுக்கு வேற பொழப்பு இருக்கு..அதுல எந்திரனும் இருக்கு. அயோத்யாவில் யார் ஒன்னுக்கு அடித்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை. நாங்கள்
தமிழர்கள்//

அய்யா! ரஜினி எப்போது தமிழரானார்?
- அ.ஷ.

mrknaughty said...

நல்லா இருக்கு
thanks
mrknaughty
click here to enjoy the life

Prem said...

/**அயோத்யாவில் யார் ஒன்னுக்கு அடித்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை. நாங்கள் தமிழர்கள். **/

உங்க பின்னூட்டத்தை பார்க்கறப்ப, தமிழர்கள் யாருக்குமே அயோத்யா பத்தி அக்கறை இல்லாத மாதிரி ஒரு தோற்றம் வருது. கொஞ்சம் பாது எழுதுங்க, தயவு செய்து.

அப்பறம், நானும் தீவிர ரஜினி ரசிகன் தான்... ஆனா எந்திரன் நான் எதிர்பார்த்த அளவுக்கு இல்ல... முப்பது வயசு கிழவியை இன்னும் ஆட வச்சிட்டு இருக்காங்க.. சிவாஜி படத்துல, "அதிரடிக்காரன்... மச்சான்.." பாட்டுல வர ஸ்டைல் இந்த படத்துல சுத்தமா மிஸ்ஸிங்... முதல் பாதி நல்லா போகுது, ரெண்டாவது பாதி, அந்த "ம்ம்மே..." அல்டிமேட்டு... முடிவு, ரொம்ப சப்பை-யா இருந்திச்சி...

படம் ஓடிச்சினா அதுக்கு ரஜினி மட்டும் தான் காரணம்... சங்கர்,ரகுமான் எல்லாம் ஈடுபடல..

LinkWithin

Blog Widget by LinkWithin