சகிக்க முடியாத வேதனையோடும் விரக்தியோடும் இந்தப் பதிவை எழுதும் சூழலுக்கு நான் தள்ளப்பட்டிருக்கிறேன். வேறு வழியேயில்லையா என்று என்னை நானே கேட்டுக் கொண்டபோதும் இதற்கான வழியில்லை என்பதைப் புரிந்து கொண்டது முதல் மனது அரற்றிக் கொண்டேயிருக்கிறது.இப்படி ஓர் சூழல் நிகழுமென்று அறிந்திருந்தால் - இப்படி சென்னைவாசிகள் எல்லாரும்- ஏன் ஒட்டு மொத்தத் தமிழகமுமே கையை விரித்திருக்குமென்று தெரிந்திருந்தால் முன்னதாகவே மாற்று ஏற்படுகளைச் செய்திருக்க முடியுமே என்ற நிலையில் இன்னமும் என்னை நானே ஆற்றிக்கொள்ள முடியாத சூழலில் இருக்கிறேன் நான்.
ஆனாலும் இப்படி ஒரு அநியாயத்தைச் செய்ய எப்படி மனது வருகிறது இவர்களுக்கு? அந்த அளவுக்கா ஒரு சமூகம் கெட்டழிந்து போக வேண்டும்? கலை, கலாசார, இலக்கியச் சூழல்கள் செத்து மடிந்து போன ஒரு நாட்டில் இதைத்தான் எதிர்பார்க்க முடியுமென்றாலும் எஞ்சியிருக்கும் கொஞ்ச மனசாட்சிக்குப் பயந்தாவது ஏதேனும் செய்யப்பட்டிருக்கலாம்.
“எலே! சவத்து மூதி. என்ன எழவுன்னு சொல்லிட்டு சலம்பித் தொலையம்லே!’ன்னு யாராவது கேட்கக் கூடும். விசயம் ரொம்ப எளிதானது. எந்திரனுக்கு டிக்கெட் கேட்டாராம் சாரு. யாரும் எடுத்துக் கொடுக்கவில்லையாம். அவர் தனது தளத்தில் வெந்து தணிந்திருப்பதைப் பார்த்தபோது இதைப்போல இன்னும் எத்தனை எழுத்தாளர்கள் வெந்து மனதுக்குள் புலம்புகிறார்களோ என்ற இரக்க உணர்வு வந்துவிட்டது. அதிலும் மற்றவர்களாவது பரவாயில்லை. தமிழ்ப்பத்திரிகைகளிலோ அல்லது பதிவுகளிலோ எந்திரனைக் குதறப் போகிறவர்கள். சாருவோ மலையாளப் ப்த்திரிகையில் சென்று எந்திரன் சரியில்லை என்று எழுதக் காத்திருப்பவர்.அவருக்கு அந்த வாய்ப்பை மறுத்ததன் மூலம் அவரது அழியாப் புகழுக்கு மேலும் களங்கம் கற்பிக்கவே இந்தத் தமிழ்ச்சமூகம் தலைப்படுகிறதென என்னால் உணர முடிகிறது
கவலைப்படாதீர்கள் சாரு!
அடுத்த முறை ரஜனியின் படம் வெளியாகும்போது உங்களை அமீரகம் அழைத்து வந்து ‘கான்கார்டு’ சினிமாவிலோ அல்லது ‘கலேரியா’ திரையரங்கிலோ படம் பார்க்க வைத்து அதன் மூலம் மலையாள ரசிகர்களுக்கு உங்களது சூடான விமர்சனத்தை வழங்கும் வாய்ப்பை எப்பாடுபட்டாவது பார்த்துக் கொள்கிறோம். இதன் மூலம் உலகத் திரை விமர்சனங்களில் முதன்முறையாக நாடு விட்டு நாடு வந்து விமர்சனம் எழுதிய முதல் உலக எழுத்தாளர் என்ற பெருமை உங்களுக்குக் கிடைக்கும். அதன் மூலம் செத்துப் போன தமிழ்ச்சூழல் மீண்டும் உயிர்த்தெழும் புண்ணியமும் உங்களையே வந்தடையும்.
என்ன ஒரு சிக்கலென்றால்...
அடுத்த ரஜனி படம் வரும் வரைக்கும் தமிழ்ச்சூழல் மேலும் மேலும் செத்துப் போகாமலிருக்க நீங்கள் உங்கள் வைத்தியத்தை தொடர்ந்து கொண்டேயிருக்க வேண்டும். ரஜனி படத்துக்கு விமர்சனம் எழுதுவதற்காக இந்தத் தியாகத்தைக்கூட செய்ய மாட்டீர்களா என்ன?
சாருவோட படத்தைப் போடத்தான் நெனச்சேன். இந்தப் பொண்ணு பேரும் சாரு (அரோரா) தானாம். ஹிஹி அதான்

14 பின்னூட்டங்கள்:
:)))
இதை நீங்க எழுதியிருக்கிறது பார்க்க மகிழ்ச்சி. ஏன்னா, நான் இதை வச்சுத்தான் அடுத்த மொக்கை போடுறதா இருந்தேன். உங்க இயல்பான நகைச்சுவையிலே இடுகை தூள்பறக்குது அண்ணாச்சி!
அண்ணாச்சி உங்க பதிவை பார்த்த பிறகு கலதாரி, கன்கார்ட் லேயாவது சாருக்காக அரேஞ் செய்யலாம்னு பாத்தா இங்கேயும் ஒரு வாரத்துக்கு ஃபுல்லாமுலே :( :(
நம்ம தளத்துல இப்படியொரு சாரு படம் பாத்ததும் முதல்ல கொஞ்சம் அசந்து போய் ஜொள்ளு விட்டுட்டேன். ஹிஹி..
ஹிஹிஹி..
உங்களோட சலம்பல விட அவரோட சலம்பல் தான் டாப்பூ....
யாராச்சும் டிக்கெட் வாங்கிக் கொடுங்க, அப்போ தான் ஏழை எழுத்தாளர் வாழ முடியும்.
கேரளா பத்திரிகை-க்கு "தமிழ் சினிமா நாறிக்கிட்டு இருக்கு", தமிழ் பத்திரிகை-க்கு "ரஜினி ஒரு ஷான் கோன்னேரி மாதிரி, அவரது கந்த சக்தி கொண்ட கண்களுக்கு மயங்காதவர் எவரும் இல்லை"-ன்னு இரண்டு கட்டுரை எழுதி காசு பார்க்கலாம் ;-)
அண்ணாச்சி டாப்பு....
போட்டோ அதைவிட டாப்பு...
நல்லவேளை மீசைவச்ச சாருவோட போட்டாவை போடாவிட்டிங்க... காரிதுப்பிருப்பேன் என் மானிட்டர் தப்பிச்சுது....
//நிலைமை இப்படி இருக்கிறது. ஒரு பிரபலமான எழுத்தாளனுக்கு ஒரு படத்தைப் பற்றி மதிப்புரை எழுதுவதற்காக டிக்கட் எடுத்துக் கொடுக்கவே ஆள் இல்லை என்கிற போது இந்த சமூகத்திலிருந்து எனக்கு என்ன கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள்?//
எனக்கு வந்த சிரிப்பை அடக்கவே முடியலை!
அண்ணாச்சி நான் சாருவின் அதி தீவிர ரசிகனாகி விட்டேன்...
போட்டோவில் இருந்த சாருவுக்குத்தான்.........
அடுத்த பதிவு எப்பல போடுத சாருவ பத்தி.
ஹி ஹி... சாரு போட்டோ நல்லாயிருக்கு அதான்.
நல்ல இருக்கு
thanks
mrknaughty
யோவ், கையை வைத்துகொண்டு சும்மா இருக்கமாட்டீராவே?சொடுக்கியை சுட்டி சாருவிம் மத்த கட்டுரைகளையும் சும்மா படித்தபோது இவ்வளவு பெரிய ஆளாண்னு அதிர்ச்சிய்யாயிட்டேன். உடல் தானம் மற்றும் ஒரு தானம்! கட்டுரையில`` என் வாழ்நாள் பூராவும் நான் வாழும் சமூகத்துக்கும் என் மொழிக்கும் எந்தக் கூலியும் பிரதிபலனும் கிடைக்காமல் – என்னுடைய ஆத்மாவையும் குருதியையும் வியர்வையையும் எழுத்தாக மாற்றிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். என் வாழ்க்கையை மெழுகாக உருக்கித்தான் என் எழுத்து உருவாகிறது. எனவே சராசரி மனிதர்களின் கவலைகளையும் அபிலாஷைகளையும் என் மீது திணிக்காதீர்கள்.``என்று எழுதியிருப்பதை படித்துபாரும்வே
சகட்டு மேனிக்கு எல்லோரையும் நிந்தித்து சாறு பிழிவதால்
இன்று முதல் இவருக்கு சாறு நிந்த்தித்தா என பெயரை சூட்ட விரும்புகிறேன்.
உங்களின் சினிமா விமர்சனங்கள் நல்ல ஆரோக்கியமாக அமைந்துள்ளது தொடர்ந்து இதுபோன்று எழுதுங்கள் சில வட்டார சொற்களை தவிருங்கள் ஈழத்தவர்களுக்கு புரிய வில்லை
Post a Comment