13 September 2010

’ரைட்டர்’ கடுதாசி

நெடுநாட்களுக்குப் பின் பதிவு பக்கம் வரலாமென்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது எனக்கு வந்த இந்த வாசகர் கடிதம். பதிவுலகில் பிரபலமானவர்களுக்கு வாசகர்கள் கடிதங்கள் எழுதுவதும் அதை அவர்கள் பிரசுரிப்பதும் சகஜம்தான் என்றாலும் எனக்கும் ஒரு வாசகர் கடிதம் வந்திருக்கிறது அதுவும் நான் பதிவெழுதத் துவங்கி இத்தனை ஆண்டுகளில் வந்திருக்கும் ஒரே வாசகர் கடிதம் எனும்போது அதைப் பிரசுரிக்காமல் இருக்க முடியுமா என்ன?

அன்புள்ள அண்ணாச்சி,

நீண்ட நாட்களாகவே உங்கள் பதிவுகள் வறட்சியாகக் காட்சியளிப்பதைக் கண்டு இதயம் வெம்பியிருக்கும் கோடானுகோடி தொண்டர்களில் நானும் ஒருவன்.

ஏன் பதிவுகள் எழுதுவதில்லை? எங்கள் எழுதாக் கடிதங்கள் வராக்கடிதங்கள் ஆகிவிட்டதாலா?

லாக்கப்பில் போட்டு முட்டிக்கு முட்டி தட்டினால் எழுதுவீர்கள் என்றால் சொல்லுங்கள்,  இதயத்தைக் கல்லாக்கிக் கொண்டு அதையும் செய்யத் தயாராகி விடுகிறோம்.

சென்ற வாரம் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டுத் திரும்புகையில் சுமார் முப்பத்தைந்து பேர் என்னைச் சூழ்ந்துகொண்டு ஏன் அண்ணாச்சி பதிவு எழுதுவதில்லை, இன்னும் ஒரு வாரத்தில் பதிவு வராவிட்டால் உன்னைச் சும்மா விடமாட்டோம் என்று அன்பு கலந்த மிரட்டலை வெளிப்படுத்தினார்கள். 

போர்ஹேஸும் ஆல்பர் காம்யூவும் வள்ளுவரும் வாத்சாயனரும் ஒருங்கே தூங்கிக்கொண்டிருக்கும் உன்னத எழுத்தைக் கொண்ட தங்கள் பேனா தூங்கலாமா, மவுஸ் ஓயலாமா, கலப்பை துருப்பிடிக்கலாமா?

இப்படிப்பட்ட வாசகர்களைக் கையில் வைத்துக்கொண்டு சாக்ரடீஸா ரேட்டிங்கில் முதலிடம் பெறாமல் அமைதியாக இருப்பதுவும் ஏன்?

அமீரக தாதாக்கள், மிட்டா மிராசுகள் சொல்படி,

பினாத்தல் சுரேஷ்.

பெரிய ‘ரைட்டர்’ ஆன பிறகும் கூட இப்படி ஒரு கடுதாசி போட்டிருப்பதை நினைச்சு எனக்கு அழுவாச்சியாவே இருக்கு..நல்லா இருலே மக்கா!!

17 பின்னூட்டங்கள்:

குசும்பன் said...

//தங்கள் பேனா தூங்கலாமா, மவுஸ் ஓயலாமா, கலப்பை துருப்பிடிக்கலாமா?
//

:))))))))))))))

அடிவிழும்:))

குசும்பன் said...

//அமீரக தாதாக்கள், மிட்டா மிராசுகள் சொல்படி,
பினாத்தல் சுரேஷ்.
//

வாழும் வரலாறு வாழும் ஜீவநதிக்கு கடிதம் எழுதுகிறதா?

அவ்வ்வ்வ் அண்ணாச்சி ஆனந்த கண்ணீர் அண்ணாச்சி ஆனந்த கண்ணீர்:))

குசும்பன் said...

//நீண்ட நாட்களாகவே உங்கள் பதிவுகள் வறட்சியாகக் காட்சியளிப்பதைக் கண்டு இதயம் வெம்பியிருக்கும் கோடானுகோடி தொண்டர்களில் நானும் ஒருவன்.
//

ஒரு தொண்டனுக்காவது தண்ணீ ஊத்தனும் என்று தோனுச்சா?:((

நாஞ்சில் பிரதாப் said...

புதிய பதிவில்லாமல்
உங்கள் வலைப்பூ வாடியபோதெல்லாமம்
நானும் வாடினேன் :))

அண்ணாச்சி இது எப்படி இருக்கு??:)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

அண்ணாச்சி..!

டூ மச்சான மேட்டர் இது..!

இந்த மாதிரி ஒப்பாரி வைக்கிறதை விட்டுட்டு உங்களோட தம்பிகள் எல்லாருக்கும் தனித்தனியா லெட்டர் எழுதி உடனே அனுப்பி வைங்க..!

அபி அப்பா said...

தப்பெல்லாம் பெனாத்தலார் மேலத்தான். அவருக்கு கச்சேரி வைப்பது தான் இதுக்கு ஒரே மருந்து. ஏதோ பழமொழி கூட சொல்லுவாங்களே மறந்து போச்சு..தூங்குறவன்னு ஆரம்பிக்குமே... சரி அதை விடுங்க...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//போர்ஹேஸும் ஆல்பர் காம்யூவும் //

அண்ணாச்சி,

இவங்க எல்லாம் யாருங்க..

இப்பவே கண்ணக் கட்டுது...

குசும்பன் said...

//ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...
//போர்ஹேஸும் ஆல்பர் காம்யூவும் //

அண்ணாச்சி,

இவங்க எல்லாம் யாருங்க..

இப்பவே கண்ணக் கட்டுது...
//

என்ன செந்தில் இதுக்கூட தெரியாம இருக்கீங்க...

போர்ஹேஸு யாருன்னா போர்னோ இலக்கியம் படைப்பவர்...


காம்யூவு யாருன்னா காம இலக்கியம் படைப்பவர்...

இதுபோதுமா இல்ல இன்னும் டீடெயில் வேண்டுமா?

Prabhu Rajadurai said...

நீர் என்ன இணைய எழுத்தாளர்...இணைய எழுத்தாளர், பெரிய எழுத்தாளர் என்றால், ஆப்ரிக்கா வாசகி காவ்யா, விஜயவாடா வாசகி நூருன்னிசா என்றுதான் கடிதம் வரும்...உம்மையெல்லாம் ஒத்துக்க முடியாது

குசும்பன் said...

//பெரிய ‘ரைட்டர்’ ஆன பிறகும் கூட இப்படி ஒரு கடுதாசி போட்டிருப்பதை நினைச்சு எனக்கு அழுவாச்சியாவே இருக்கு.//

அண்ணாச்சி சென்ஷி ரைட்டர் அடுத்த கடிதம் எழுதுவார்:)

சென்ஷி said...

பெனாத்தலாரின் ஆசி பெற்ற ஒர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரே பதிவரான அண்ணாச்சிக்கு வாழ்த்துகள்..

***

பெனாத்தலாரே.. அது மிட்டாமிராசா இல்லை மிட்டாய் மிராசா :))

அப்துல்மாலிக் said...

//லாக்கப்பில் போட்டு முட்டிக்கு முட்டி தட்டினால் எழுதுவீர்கள் என்றால் சொல்லுங்கள், //

இப்புடி எத்தனபேரு எத்தன நாளா தவமிருந்து கெளம்ப்ருக்கீக‌
அண்ணாச்சி சாக்கரதயா இருந்துக்கோங்க‌

ஜெஸிலா said...

உங்களுக்கு கடிதம் எழுதுவதே வாசகரை பற்றி இரண்டு வார்த்தை சொல்வீங்க, பிரபலமாகிவிடலாமென்று தான். குறைந்தபட்சம் பெனாத்தலாரின் வலைப்பதிவு தளத்திற்கு சுட்டியையாவது தந்து வையுங்கள். :-)

ராம்சுரேஷ் said...

இருந்த எல்லா உணர்வுகளையும் கடிதத்திலேயே கொட்டித் தீர்த்துவிட்டதால், இப்போதைக்கு ஜெஸிலாவை வழிமொழிகிறேன்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

போர்ஹேஸும் ஆல்பர் காம்யூவும் //

இவங்க யாரு? இன்னும் ஒரு பின்னூட்டம் கூட எனக்கு போட்டதில்லையே.?

கண்ணா.. said...

//தங்கள் பேனா தூங்கலாமா, மவுஸ் ஓயலாமா, கலப்பை துருப்பிடிக்கலாமா?
//

:)) ROTFL

d said...

Bloggerல் எழுதுவோர் கவனத்திற்கு

http://ramasamydemo.blogspot.com/2010/09/blogger.html

LinkWithin

Blog Widget by LinkWithin