அமீரகப் பதிவர் சந்திப்பு குறித்த அறிவிப்பு வந்தபின் ஐநூறு பேருக்குமேல் இதுவரை வருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். வரலாமா என்று மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி மூலம் கோரியவர்களை பரிசீலித்தபின் அவர்களை அழைத்திருக்கிறோம். ஆனால் இருபந்தைந்து என்ற எண்ணிக்கையே எங்களுடைய அதிக பட்சம். ஆகவே மேற்கொண்டு எவரும் வருகையை தெரிவிக்க வேண்டாம் என்று கோருகிறோம். இடவசதி உணவு ஏற்பாடு வசதி முதலியவற்றைக் கருத்தில்கொண்டே இந்த முடிவு என்பதை புரிந்துகொள்ளும்படி கோருகிறோம்.
வருவதாக்ச் சொன்னவர்கள் தங்கள் வருகையை வரும் நாளை மாலைக்குள் உறுதி செய்யவேண்டும். அதை ஒட்டியே பிற ஏற்பாடுகள் செய்யப்படும். வருவதாக உறுதியளித்தபின் வராமலிருப்பதை ஒர் அவமதிப்பாகவே கொள்வது எங்கள் வழக்கம். மிகச்சிலர் அவ்வாறு செய்வதுண்டு, நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் அவர்களைப் பிறகு எப்போதும் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறோம் – நட்பைப் பேணியபடியே.
தவிர்க்கமுடியாத காரணங்கள் இருக்கலாம். அதை ஏற்பதில் தடை இல்லை. ஆனால் பதிவர் சந்திப்புகள் போன்றவற்றுக்கு ‘முடிந்தால் போகலாம்’ என்ற மனநிலை ஊக்குவிக்கப்படக்கூடாது என்பதற்காகவே இந்த அறிவிப்பு. பதிவர் சந்திப்பு வாழ்க்கையின் முக்கியமான ஓர் அங்கம்; அதற்காக சிறிது இழக்கவும், சிறிது உழைக்கவும், சிறிது பொறுத்துக்கொள்ளவும் தயாராக இருப்பவர்களை மட்டுமே நாங்கள் உத்தேசிக்கிறோம். அப்போதுதான் கூட்டம் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் இக்கூட்டங்களைப் போதிய அமைப்புபலம் இல்லாமல் செய்கிறோம். பணம் இழப்பு பிரச்சினை இல்லை. வேலை செய்ய எவரும் இல்லை என்பதே சிக்கல். நண்பர்களே அனைத்தையும் செய்கிறார்கள். நான் பொதுவாக (அலுவலகத்திலேயே) வேலை எதுவும் செய்வதில்லை என்றாலும் வேலைசெய்யும் ராசாகான் போன்ற நண்பர்களின் உழைப்பு வீணாவதை விரும்புவதில்லை. ஆகவே இத்தகைய கறாரான விதிகள்.
ங்கொக்காமக்கா..இப்படியெல்லாம் ஒரு எழவு கண்டிசனும், ’பில்டப்’புகளும் நமக்கு இல்லை மக்கா. (இதைப்படித்து விட்டு எவரேனும் வந்து பதிவர் சந்திப்பென்றால் சில கீழப்படிதல்கள் அவசியம்தான் என்று பின்னூட்டம் போடமலிருக்க வேண்டும்)
வழக்கம்போல வந்து கும்மியடிச்சுட்டு சாப்பிட்டுட்டு சந்தோசமா இருந்துட்டு போகலாம். மேலதிக விபரங்கள் வேணும்னா குசும்பன் 050 266 41 31, சென்ஷி 050 314 60 41 இந்த இரண்டு பிரபல பதிவர்களைத் தொடர்பு கொள்ளுங்க
சத்திரத்தில் சந்திப்போம்

17 பின்னூட்டங்கள்:
//இதைப்படித்து விட்டு எவரேனும் வந்து பதிவர் சந்திப்பென்றால் சில கீழப்படிதல்கள் அவசியம்தான் என்று பின்னூட்டம் போடமலிருக்க வேண்டும்//
பதிவை கடைசி(வரி)வரை படிக்காமால நான் பின்னூட்டம் இட்டுருந்தால் இந்த விபத்து நடந்திருக்கும்.
:)
சந்தித்து சிரிக்கப் போகும் பதிவர்களுக்கு நல்வாழ்த்துகள் !
:)
இதில் ஏதேனும் உள்குத்து இல்லை.
சந்திப்பு சிறக்க வாழ்த்துகள்
அண்ணாச்சி பேசும்போது கொட்டாவி விடக் கூடாது, உச்சா போகணும்னு தப்பிச்சு ஓடக் கூடாதுங்கிற முக்கிய கட்டளைகளை மறந்திட்டீங்களே? ;-)
அமீரகப் பதிவர் சந்திப்பு சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்!
//அமீரகப் பதிவர்கள் சந்திப்பு இடப்பக்கம் இருக்கும் அட்லாண்டிஸ் சொகுசு விடுதியிலிருந்து சுமார் 47 கிமீ தொலைவில் சார்ஜாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.//
ஹாஹா... எப்படீங்க அண்ணாச்சி..
புதிய பதிவர்கள் பலர் அமீரகத்தில் இருப்பார்கள் போல தெரிகிறது. அவர்களுக்கு உதவும் வகையில் வரைபடத்தையும் இணைத்தால் நன்றாக இருக்குமே..
தொலைபேசி எண்களை வழமையாக +என ஆரம்பித்து தேசத்தின் கோட், ஏரியா கோட் ஆகியவற்றுடன் தரப்பாருங்களேன்.
சென்ஷியின் நம்பரை நான் (சென்னையிலிருந்து) டயல் செய்ய முயற்சித்தேன், அம்மாதிரி எண்ணே இல்லை என வருகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
00919884012948
நன்றி அண்ணா, வருவதற்கு முயற்சி செய்கிறேன்
சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்...
இந்த முறையாவது பிரியாணியை பறிகொடுக்காமல் சூதானமா இருந்துகோங்க :))
@ டோண்டு
சென்ஷி நம்பர்
+971 503146041
:)))
அண்ணாச்சி, தூள்!
//அட்லாண்டிஸ் சொகுசு விடுதியிலிருந்து சுமார் 47 கிமீ தொலைவில் சார்ஜாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.//
ங்கொய்யாலா... நான் கூட போட்டோவைப் பார்த்துவிட்டு அண்ணாச்சி சொகுசு விடுதியில ஏற்பாடு செஞ்சிருக்காருன்னு நெனைச்சிட்டேன்...
அமீரகப் பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்!
அன்புடன்,
-ரவிச்சந்திரன்
சந்திப்பு சிறப்பாக நடைபெற இந்தியாவிலிருந்து எனது வாழ்த்துக்கள்!
ஸ்ரீ....
அப்பாலிக்கா எப்போ ஊருக்கு வர்றீங்க அண்ணே.?
அண்ணாச்சி பிரியாணி எங்கிருந்து வருகிறது என்று சொல்லிடுங்க..அப்பதான் நான் நோம்பு இருக்க வசதியாக இருக்கும்... டேஸ்டி பிரியாணி என்றால் இன்று மாலையில் இருந்தும்... புகாரிபிரியாணி என்றால் நாளை காலையில் இருந்தும் நோம்பு இருப்பேன்:)))
நல்லாக் கூடி கும்மி அடிங்க :)
எம்.எம்.அப்துல்லா
நாளை ஒரு வரலாற்று நிகழ்வு நடக்கவிருக்கிறது.:)
எனக்கு ஒரு விசிட் விசாவும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் டிக்கட்டும் அனுப்பினால் நானும் அமர்வில் கலந்து கொள்கிறேன்
Post a Comment