ஒரு கிராமவாசியின் புலம்பல்கள் அவனது அடர்த்தியான மௌனம் கலைத்துப் புறப்பட்டு வருகிறது - உயிர்த்தெழும் மரத்தைப் போல
01 August 2010
வீடு என்றோர் கனவு
அண்ணாநகர் தாண்டியதும் மெல்ல மெல்ல தன் குதிரை சக்திகளை பயன்படுத்தி வேகமெடுக்கிறது அந்த சொகுசுச்சீருந்து. சீருந்துக்குள் ‘வளவள’வென்று தமிங்கலம் பேசும் பெண்குரலைத் தொடர்ந்து ஒலிக்கும் பாடலை அமர்ந்திருந்தவர்கள் யாரும் ரசித்த மாதிரி தெரியவில்லை. அவர்கள் தமக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள். ஓட்டுனருக்கு அருகாமையில் நான் சென்னையின் புதிய வளர்ச்சியை அவதானித்துக் கொண்டிருந்தேன். சாலைகள் அகலப்பட்டாலும் குறுக்கும் நெடுக்குமாகவே வண்டி ஓட்டுவதுதான் சாலை ஒழுங்கு என்று யாரோ போதித்தது போலவே எல்லாரும் தத்தமது வாகனங்களை (அ)சிரத்தையாக ஓட்டிக் கொண்டிருந்தார்கள்.’
முதன்மைச் சாலையிலிருந்து வலது பக்கம் திரும்பி கொளத்தூர் சாலையில் பயணித்து அங்கிருந்து மீண்டும் மேடும் பள்ளமும் நிறைந்த ஒரு கிளைச் சாலையில் சில நிமிடங்கள் சென்றதும் ‘இதோ இங்கே’, ‘வலது பக்கம்’, ‘அந்த வீட்டுக்குப் பக்கத்துல’ போன்ற வழிகாட்டுதலுக்குப் பின் அந்த மூன்று மாடி அடுக்ககத்தின் முன்னர் அந்த வண்டி நின்றது
‘வாங்க..வாங்க’ என்று அழைத்துக்கொண்டே என் சகோதரி முன் செல்ல நாங்கள் தொடர்ந்தோம். நாங்களென்றால் நான் அபி ஜெஸி என் தம்பி குடும்பம் அம்மா அப்பா எல்லோரும்தான். நாங்கள் சென்றது என் தங்கை மகள் வசிக்கும் இல்லத்திற்கு. அந்த அடுக்ககத்தில்தான் அவளது கணவரும் அவரது சகோதரருமாகச் சேர்ந்து வீடு வாங்கியிருக்கிறார்கள்.
அங்கே சென்று கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டிருந்ததும் தேநீர் அருந்தினோம் வீட்டை நேர்த்தியாகப் பார்த்துப் பார்த்து அழகுபடுத்தியிருந்தது எனக்குப் பிடித்திருந்தது.சில நிமிடங்களில் உம்மா என்னிடம்’ சரி வா! உன் வீட்டைப் பார்க்கலாம்’ என்றார்கள்.
பல சிரமங்களுக்கிடையில் ஒருவகையாக சென்னையில் நான் வாங்கியிருந்த வீடும் அதே அடுக்ககத்தில்தான் இருந்தது என்பதும் நான் துபாயில் இருக்கும்போதே வீட்டை வாங்கி விட்டதால் வீடு எப்படியிருக்கிறது என்று நான் பார்த்து மகிழ வேண்டுமென்பதாலும் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் திட்டமாகத்தான் இந்தப் பயணம்.
ஏனோ தெரியவில்லை.வீட்டை வாங்கியிருந்தாலும் சென்னை வந்ததுமே அதை உடனே போய் பார்க்க வேண்டுமென்ற எந்த உந்துதலுமில்லாமலேயே இருந்தது. சொந்த வீடு என்ற கனவோடு ஏங்குகிற எத்தனையோ கோடிக்கணக்கானவர்களுக்கு நடுவில் வீடு வாங்கிய பின்னரும் கூட அது குறித்த சிந்தனையோ அல்லது ஆர்வமோ இல்லாமல் இருந்த என்னை நண்பர்கள் கூடக் கொஞ்சம் வித்தியாசமாகவே பார்த்தார்கள்.
என் மருமகளின் இல்லக் கதவைத்தாண்டினால் அதே தளத்திலேயே 15 மீட்டர் தொலைவில் இருக்கிறது நான் வாங்கிய வீட்டின் கதவு. வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கும் அந்த இஸ்லாமிய மூதாட்டி எங்களை வரவேற்றார். அபியும் ஜெஸியும் ஏற்கெனவே பார்த்திருந்தாலும் மீண்டும் ஒருமுறை உற்சாகமாகச் சுற்றி வந்தார்கள் வீட்டை. நானும் வரவழைத்துக் கொண்ட உற்சாகத்தோடு அவர்களோடு சுருக்கமாக நடந்து பார்த்து விட்டு வந்தேன்.பெரிய ஆர்ப்பாட்டங்கள் ஏதுமில்லாத இரட்டைப்படுக்கையறை வீடு என்பதைத் தவிரப் பெரிதாய் வேறொன்றுமில்லை.
சென்னையில் எனக்காகச் சொந்த வீடு என்பது என் பெற்றோர்களின் ஆசையாகவும் கனவாகவும் இருந்தது - யாஸ்மினின் கனவாகவும். யாஸ்மினின் கனவை நனவாக்கி நிற்கிறது அந்த வீடு ஆனால் கனவு கண்டவள்தான் கனவாகிப் போய் மூன்றாண்டுகளாகி விட்டது
Subscribe to:
Post Comments (Atom)


21 comments:
நண்பர்கள் தின வாழ்த்துக்கள் அண்ணாச்சி. அப்படியே புது வீட்டிற்கும்.
ஆனால் கனவு கண்டவள்தான் கனவாகிப் போய் மூன்றாண்டுகளாகி விட்டது
:((
//ஆனால் கனவு கண்டவள்தான் கனவாகிப் போய் மூன்றாண்டுகளாகி விட்டது//
:-(
அந்த நினைவுகளும், வீட்டை பற்றிய உரையாடல்களும் நிறைய வலியை கொடுத்தாலும்.... வாழ்த்துக்கள் வீடு வாங்கியதற்கு ....
புது வீட்டுக்கு வாழ்த்துக்கள்!!
உங்க வலி புரியுது அண்ணாச்சி... :(
புதுவீட்டுக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் புது வீட்டுக்கும் புது டெம்பிளேட்டுக்கும் !!
கடைசி வரிகள் கனக்கிறது :(
வீடு வாங்கியதற்கு வாழ்த்துகளைச் சொல்ல நினைத்த எனக்கு கடைசி வரிகளில்.. :(
:(
வீடு வாங்கியதற்கு வாழ்த்துக்கள் ...
உங்கள் மனைவியின் மறுமை வாழ்வு சிறக்கவும் உங்களின் மன அமைதிக்காகவும் பிரார்த்திக்கிறேன்.
புது வீட்டுக்காக வாழ்த்துகள்.
புது வீட்டுக்கு வாழ்த்துக்கள் அண்ணாச்சி :-))
சொந்த வீடு என்ற கனவு நனவாகும்போது வரும் குதூகலம் தனிதான். பிரார்திப்பது தவிர வேறு ஒன்ருமில்லை
அண்ணாச்சி
:)
:(
இரண்டு விதமான உணர்வுகளையும் கலந்த எழுத்து.
மிகுந்த கனத்தை படிப்பவர்கள் மனதிலும் சுமத்துகிறீர்கள் ஆசிப்.
புதுமனைக்கு வாழ்த்துகள் அண்ணாச்சி :)
கடைசி வரிகளுக்கு :(
I sincerely pray for you and your children. May Almighty bless you all with peace and comfort.
I am a reader of your blog for recent times about one year and listening you (rarely) in Asianet radio in the late evening (10PM)Tamil programme. I am working in Abu Dhabi and my name is Barakathullah and my mobile number is 050 7917 626 and email ID is abarakathullah@hotmail.com. I would like to be in touch with you and please sms your mobile number or email ID for further contacts. Thanks and regards.
சொந்த வீடு என்பது படித்த படிப்பை விட சேர்த்த வைத்த பணம் காசைவிட பெர்ர்ர்ரிய மதிப்புள்ளது. எனது திருமணம் தள்ளிப்போனத் கூட மாப்பிள்ளைக்கு சொந்த வீடு இல்லை எனற காரணம் ( கூட்டுக் குடும்பமாக தாத்தா விட்டிலிருந்ததால் ) அமீரகத்தில் குருவி சேர்ப்பது போல சேர்த்து சொந்த வீடு வாங்கி 16 ஆண்டுகள் இன்று நான் அரைக் கோடிஸ்வரன். தெருக்கோடியில் உள்ள என் வீட்டை அரக்கோடிக்கு மேல் கேட்கிறார்கள்
சொந்த வீட்டுகாரராகிய உமக்கு வாழ்த்துகள்
ஆனால் கனவு கண்டவள்தான் கனவாகிப் போய் மூன்றாண்டுகளாகி விட்டது
:((
ஆனால் கனவு கண்டவள்தான் கனவாகிப் போய் மூன்றாண்டுகளாகி விட்டது
- விழிகள் ஈரமானது கடைசி வரியைப் படித்து....
திருச்சி சையது.
ஐந்து ஆண்டுகள் .. :-((. I know how hard it is.. especially for kids.
:-(((
Post a Comment