25 June 2010

இன்னுமொரு புதிய பதிவர்

’எங்க பள்ளிக்கூடத்துல ஒருத்தருமே புத்தகம் வாசிக்குறதில்ல வாப்பா’ என்றான் அபி. அவன் நூலகத்திற்குச் சென்று 300 பக்கம் கொண்ட ஏதோ ஒரு அறிவியல் புதினம் எடுத்து வந்ததைப் பார்த்த வகுப்பறை தோழர்கள் அவனை ஒரு வேடிக்கைப் பொருளைப்போலப் பார்த்திருக்கிறார்கள். ”பாடப் புத்தகத்தை விட்டா ஒண்ணும் வாசிக்க மாட்டாங்க போல” என்றான். இதுதான் சென்னையின் ஒட்டுமொத்த மாணவ்ர்களின் நிலையா என்று தெரியவில்லை. அப்படியிருந்தால் மிக மிக கவலை தரும் செய்தி இது என்றாலும் இன்னொரு மகிழ்ச்சியான செய்தி இருக்கவே இருக்கிறது.

“இங்க இந்தியாவில எப்பப் பார்த்தாலும் எல்லாரும் படி படின்னு சொல்றாங்க்ளே தவிர யாருக்குமே குழந்தைப் பருவம்ன்னு ஒண்ணு இருக்குன்னு புரியுறதே இல்லை” என்றான் பெரிய மனுசத்தோரணையில். ”அப்படின்னா அதைப் பத்தி எழுது” என்றேன். பத்திரிகைக்கா?” என்றான். இல்லைடா! நான் என் சோகக் கதையெல்லாம் புலம்புறதுக்கு வலைப்பூ வச்சிருக்குற மாதிரி நீயும் உனக்குன்னு ஒண்ணு தொடங்கி அதுல நீ நினைக்குறதை எல்லாம் எழுது” ன்னு சொன்னேன். (நீ கெட்டது போதாய்யான்னு யாருலே அது குரல் விடுறது?) இப்போது அபியும் பதிவராகி விட்டான் (ஆனா சங்கத்துல எல்லாம் சேர மாட்டான். என்னை மாதிரி இல்லாம் வெவரமான பய :-). பதிவில் மழலைத்தனமும் முதிர்ச்சியின்மையும் வெளிப்படும். மொழியாளுமை கூட குறைபாடாக இருக்கலாம். ஆனால், எழுதத் துவங்கியிருப்பது ஒரு தகப்பனாக எனக்குப் பெருமையாகவே இருக்கிறது. அதை உங்களோடு பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியாகவும் அபியின் பதிவு

******

சில் சமயம் நாட்டுல நடக்குற அநியாயங்களுக்கு கணக்கு வழக்கே இருக்காது. எங்க வாப்பா பேரு அப்துல் ஜப்பார்னு உங்க எல்லாருக்கும் தெரியும்லா.ஆனா, என் பையன் பேரும் அப்துல் ஜப்பார்னு உங்கள்ல எத்தனை பேருக்கு தெரியும்? வாப்பா பேரு அபதுல் ஜப்பார்னு இருக்குறதால என் கடவுச்சீட்டுல என் பேரு அப்துல் ஜப்பார் ஆசிப் மீரான்னுதான் இருக்கு. சரி ஒரு வங்கிக் கணக்கு தொடங்கலாம்னு தொடங்கியாச்சு.

என் பேருல வங்கிக் கணக்கு. என் பையன் பேருலயும் வங்கிக் கணக்குன்னு வைங்க. இந்த ரெண்டையும் பாத்துக்கறது என்னமோ வாப்பாதான். இப்போ வங்கில் இருக்குறவன் கூப்பிடுதான்னு வைங்க.

"சார், அப்துல் ஜப்பார் இருக்காரா?"
"ஆமா அப்துல்ஜப்பார்தான் பேசுறேன்"
"சார் துபாயில இருந்து எப்ப வந்தீங்க?"
"அது என் மகன். அவன் அங்க்தான் இருக்கான்?"
"இல்ல சார். ஒரு மைனர் அக்கவுண்ட் இருக்கே?"
"ஆமா. அப்துல் ஜப்பார்"
"அந்த அப்துல் ஜப்பார் யாரு சார்?"
"அதுவா? அது என் பையனோட பையன் பேரு"
"இல்லையே சார். அக்கவுண்ட் யாரு பேருல் இருக்கு?"
"என் பையன் பேருலதான்"
"அவர் பேரு அபதுல் ஜப்பாரா?"
"இல்லை. ஆசிப் மீரான்"
"இல்லையே சார். அப்துல் ஜப்பார்னுதான இருக்கு?"
"ஆமா"
"அப்ப உங்க பேரு?"
"அப்துல் ஜப்பார்தான்"
"ஏன் சார்? உங்க குடும்பத்துல வேற பேரே கிடையாதா?" இதுதான் மண்டை காய்ஞ்சு போன அந்த வங்கி ஊழியர் கடைசியா கேட்ட கேள்வி.

சரி. அதுக்கென்ன இப்பன்னு கேக்குறியளா?
சின்ன அப்துல் ஜப்பாருக்கு இன்னைக்குப் பொறந்த நாளுய்யா. அவுக தாத்தா - அதாவது ஒரிஜினல் அப்துல் ஜப்பாருக்கு - நாளைக்கு பொறந்த நாள். ரெண்டு அப்துல் ஜப்பாரும் ஒரு நாள் முன்னே பின்னே பொறந்தது கூட ஒரு வேடிக்கைதான் இல்ல?

20 பின்னூட்டங்கள்:

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஆஹா..

ரெண்டு ஜப்பார்களுக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

வாழ்க வளமுடன்..!

ஆயில்யன் said...

:)))

சீனியர் அப்துல் ஜப்பாருக்கும் ஜுனியர் அப்துல் ஜப்பாருக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :))))

தருமி said...

ரெண்டு ஜப்பார்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

என். உலகநாதன் said...

அண்ணாச்சி,

இரண்டாவது விசயம் ஏற்கனவே படிச்சாமாதிரி இருக்கு.

போன வருசம் எழுதியிருந்திங்களோ?

அபிக்கு வாழ்த்துகள்.

ராம்சுரேஷ் said...

முதிர்ந்த பதிவருக்கும், வளரும் பதிவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்.

/இரண்டாவது விசயம் ஏற்கனவே படிச்சாமாதிரி இருக்கு/

அதை மொபைல் ஃபோன் ரிமைண்டர்லே வச்சிருக்காரு மிடில் லெவல் பதிவர். ஆட்டோ பப்ளிஷ் ஆயிடும் வருஷாவருஷம்.

அஹமது இர்ஷாத் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

நாஞ்சில் பிரதாப் said...

ஆகா.. அண்ணாச்சியோட தந்தைக்கும், அண்ணாச்சியோ மகனுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அண்ணாச்சி உங்க பையன் உங்க பிளாக்கை பாலோ பண்ணலையே ஏன்னு கேட்டீங்களா-.:)))

கார்த்திக் said...

பிறந்தநாள் நல்வாழ்துக்கள் ஜாப்பர்ஸ் :-))

கார்த்திக் said...

அண்ணாச்சி அந்த கடசிபத்திய நானும் மூனு வருசமா வாசிக்குர ஞாபகம் :-))

அபுஅஃப்ஸர் said...

அண்ணாச்சி சென்ற வருடம் உங்க தளத்துலே முதன்முதலா படிச்சது இதைதான். பெயர் குழப்பம். பிறந்த நாள் வாழ்த்துக்கள்

எறும்பு said...

பெயர் குழப்பம்.

செல்லாது செல்லாது ஒரே பத்திய எத்தனை தடவை மீள் பிரசுரம் பண்ணுவீங்க??

Guru said...

சீனியர் அப்துல் ஜப்பாருக்கும் ஜுனியர் அப்துல் ஜப்பாருக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :))))

ஆதிமூலகிருஷ்ணன் said...

இரண்டு ஜப்பார்களுக்கும் வாழ்த்துகள்.

(பாரும்யா யோவ்.. புள்ளய தமிழ்ல படிக்கவையும்னு சொன்னேனே கேட்டிரா நீரு. பாரும் பயபுள்ள என்னன்னவோ இங்கிலிசுல எழுதி வச்சிருக்குது. :-))

dondu(#11168674346665545885) said...

உங்களது இப்பதிவு நான் படித்த ஒரு ஆங்கிலத் துணுக்கை நினைவுக்கு கொண்டு வந்தது.

அங்கு ஒரு நிறுவனம், அதன் பெயர் ஜான்சன் & ஜான்சன் & ஜான்சன் & ஜான்சன். (கொள்ளுத்தாத்தா, தாத்தா, அப்பா, மகன்களது பெயர்களே அவை).

தொலைபேசி ஒலிக்க, பிள்ளை ஜான்சன் எடுக்கிறார்.

“ஜான்சன் இருக்காரா”?
“அமெரிக்கா சென்றிருக்கார்”
“சார் நான் கேக்கறது ஜான்சனை”
“ஐரோப்பா போயிருக்கார்”
“ஐயோ சார், ஜான்சன் இல்லையா”?
“அவருக்கு வாந்திபேதி, ஆகவே லீவில் இருக்கிறார்”
“என்ன சார் தொல்லையா போச்சு, ஜான்சன் இல்லையா”
“ஜான்சன்தான் பேசறேன்”.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஷர்புதீன் said...

:)

பொன்ஸ்~~Poorna said...

அண்ணாச்சி, அடுத்த வருசம் சின்ன அப்துல் ஜப்பார் இதப் படிச்சிட்டு, 'வாப்பா, வருசாவருசம் இதையே எளுதுறதுக்குப் பதிலா பிறந்தநாள் வாழ்த்துக்கள் மட்டும் சொல்லலாமே? 'ன்ன போறாரு....

வாழ்த்துக்கள்..

pinkyrose said...

ஜப்பார்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

வாழ்த்துக்கள்

தருமி said...

யாரு இந்த பொன்ஸ் அப்டின்ற பதிவர்? எங்கேயோ கேட்ட பேரு மாதிரு இருக்கே!

Prabhu Rajadurai said...

"பதிவில் மழலைத்தனமும் முதிர்ச்சியின்மையும் வெளிப்படும்"

இதை யார் சொல்றதுன்னு ஒரு விவஸ்தை இல்லையா?:-))

Prabhu Rajadurai said...

ஊருக்கு விளையாட்டுப் புள்ளைன்னாலும்
புள்ளைக்கு பொறுப்புள்ள அப்பாதான்'னு நிருபிச்சிட்டீங்க்களே!

LinkWithin

Blog Widget by LinkWithin