24 June 2010

அந்த இன்னொரு படம்

புதினங்களைப் படமாக்குவதில் உள்ள சிரமங்களை ஏற்கெனவே பல இயக்குனர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். நான் நம் வணிக வகையறாக்களைச் சொல்லவில்லை. பாலு மகேந்திரா போன்றவர்கள் கூட வரிகளைக் காட்சிப்படுத்துவதில் இருக்கும் சிரமங்களைச் சொல்லியிருக்கிறார்கள் இங்கே ரஞ்சித் அம்முயற்சியில் பெரும் வெற்றிபெற்றிருப்பதாகவே விமர்சகர்கள் கருதுகிறார்கள். நான் ராஜீவன் எழுதிய ‘ப்ல்யேரி மாணிக்கம்’ புதினத்தை வாசித்ததில்லையென்றாலும் ரஞ்சித் படத்தை நகர்த்தியிருக்கும் விதமே விமர்சகர்கள் சொல்வதில் இருக்கும் உண்மையைப் புலப்படுத்தப் போதுமானதாக இருக்கிறது. பாதி ரா கொல பாதகத்திண்ட கத - (நள்ளிரவு கொலை பாதகத்தின் கதை) இதுதான் அந்த இன்னொரு மலையாளப்படம். எதேச்சையாக இதுவும் ரஞ்சித்தின் படமாக அமைந்து விட்டது

தான் பிறந்த இரவில் தனது கிராமத்தில் நடந்த ஒரு வன்புணர்ச்சி கொலையைப் பற்றி 35 வருடங்களுக்குப் பின் அறிந்துகொள்ள புறப்படும் ஹரிதாஸ் அவனுடன் அவனுக்குத் துணையாக வரும் சரயு.இருவருமே மணமானவர்கள். ஹரிதாஸ் இயல்பாக தன் மனைவியைக்  குறித்துப் பேசுகிறான். சரயு (க்ரிமினாலஜிஸ்ட்) தனது வாழ்க்கையிலிருந்து விலகிப் போன கௌதமைப் பற்றிப் பேசுகிறாள் இருவரும் ஒரே அறையில் தங்கி படுக்கையையும் பகிர்ந்து கொள்கிறார்கள். குற்றவாளி யாரென்பதைக் கண்டுபிடிக்கும் ஆர்வம் தவிர்த்து வேறு நோக்கமில்லாமல் புறப்படும் ஹரிதாஸ் ஒருவேளை குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியாமல் போனால் கூட சரயுவோடு சில நாட்கள் தனது சொந்தக் கிராமத்தில் கழித்த மகிழ்ச்சியாவது கிடைக்கட்டுமே என எண்ணுகிறான். கலாசாரக் காவலர்களைப் பற்றிய கவலையின்றி, எழப்போகும் கேள்விகளைப் பற்றிய கவலையின்றி தனது பாத்திரங்களை இயல்பாக உலவ விட்டிருக்கிறார் இயக்குனர் ரஞ்சித். அவருக்கு இருக்கும் துணிவில் அரை சதவீதமாவது மணிரத்னத்திற்கு இருந்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியதைத் தவிர்க்க இயலவில்லை. என்றாலும் படம் இது குறித்ததல்ல.

வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணிக்கம் என்ற பெண்ணைக் கொன்ற குற்றவாளி யாரென்பதைத் தெரிந்து கொள்ளப் பயணிக்கும் ஹரிதாஸின் பயணம் ஆரம்ப கட்டங்களில் அபத்தம் போலத்தோன்றினாலும் படம் நகரத் துவங்கி  மெல்ல மெல்ல வெங்காயத்தின் தோலுரிவது போல ஒவ்வொரு அடுக்காக மெல்ல மர்மத்தின் முடிச்சவிழத் துவங்குகிறது. கதையை ஒரே நேர்கோட்டில் செலுத்தாமல் கதாபாத்திரங்கள் படம் முழுக்க வந்து செல்கிறார்கள். காட்சிகள் தனித்தனியாக இருப்பது போல துவக்கத்தில் தோன்றினாலும் இறுதியில் எல்லாவற்றையும் இணைத்து அழகாக முடிச்சிடுகிறார் ரஞ்சித்

அஹமது ஹாஜி - படத்தின் முதுகெலும்பான இந்தக் கதாபாத்திரத்தை தனது அற்புதமான திரைத்தோற்றத்தின் மூலமும், நடிப்பாளுமை மூலமும் மிகச் சிறப்பாகச் செய்து கேரள அரசின் சிறந்த நடிகர் விருதைப் பெற்றிருக்கிறார் மம்மூட்டி (கேரளாவில் ஆட்சியாளர்களை சொறியும் நடிகர்களுக்கு மட்டும் விருதென்ற வழக்கம் இல்லை) இது போன்ற ஒரு எதிர்நாயகனின் வேடத்தை இவ்வளவு திறம்பட வெளிப்படுத்தியிருப்பது மம்மூட்டி ஏன் இன்னமும் இந்தியாவின் மெச்சப்படும் நடிகர்கள் பட்டியலில் இருக்கிறார் என்பதற்குச் சான்று

ஸ்வேதா மேனன் - என்ன சொல்வது? அஹமது ஹாஜி தன்னை ஜொள்ளுவது கண்டு அவனிடம் தயங்கி பின்னர் அவனிடமே மய்ங்கித்தன்னை அவனிடம் இழக்கும் சீரு என்ற கதாபாத்திரத்தை ஸ்வேதா மிக நன்றாகக் கையாண்டிருந்ததன் மூலம் கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருதையும் வென்றிருக்கிறார்.

படத்தின் காட்சிகள் நெடுக வந்துபோகும் வசனங்கள் அக்கால கட்டத்தின் சூழலை நமக்கு அனுபவமாக்குகின்றன. வீடுகளுக்குச் சென்று முடிதிருத்துவதை நிறுத்தி விட்ட கம்யூனிஸ்டு இளைஞன் ’தோழர்’ என்று அழைத்துப் பழகிய இன்னொரு கம்யூனிஸ்டு அவரது வீட்டுக்குத் தன்னை அழைத்தது அவருக்கு முடிதிருத்த என்பதைத் தெரிந்ததும் அதிர்ந்து போகும் அந்தச் சூழலும் அது தரும் அதிர்வுகளும் இன்னமும் மிச்சமிருக்கிறது.

கேரளாவில் கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்து பதிவு செய்யப்பட்ட முதல் கொலை வழக்கின் ஆதாரத்தில் புனையப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பு அதன் ஒளிப்பதிவு. என்ன சொல்லி விளக்குவதென்று புரியவில்லை. அழகு.கொள்ளை கொள்ளச் செய்யும் அழகு. அது போதும். 50களில் நடந்த படமென்பதால் அந்தக் கால கட்டத்தைக் கொண்டு வர கலை இயக்குனரும் உடையலங்கார நிபுணர்களும் மிகச் சிறப்பாக  உழைத்திருக்கிறார்கள் - விழலுக்கு எதையும் இறைக்காமல்.

கொண்டாடப்பட்ட புதினம் ஒன்றை அதன் இயல்புமாறாமல் திரையில் கொண்டு வந்தமைக்கும் நல்ல படம் பார்க்க முடிந்த அனுபவத்தைத் தந்தமைக்காவும் ரஞ்சித்திற்கு நன்றி சொல்லலாம். கொஞ்சம் மெதுவாக நகரும் படமென்றாலும் நல்லல் திரைப்படம் பார்த்த அனுபத்தை இந்தப்படம் நிச்சயம் நமக்குத் த்ரும்

பாதி ரா கொல பாதகம் - தவிர்க்க முடியாத படங்களின் பட்டியலில் நிச்சயம் சேர்க்கப்பட வேண்டிய படம்

17 பின்னூட்டங்கள்:

ராம்ஜி_யாஹூ said...

is it the same film in which mamootty played 3 roles.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

அண்ணாச்சி நலமா?
அப்போ இதை பாத்துடறேன் அண்ணாச்சி,
அடுத்த சந்திப்பை பற்றி தகவல் எப்போ?

ஆசிப் மீரான் said...

ராம்ஜி

சரிதான் மம்மூட்டி மூன்று வேடங்களில் அந்த மூன்றவாது வேடம்தான் படத்தில் திருப்புமுனை :-)

நலம்தான் கார்த்தி. சந்திச்சிடலாம்

சுல்தான் said...

நல்ல விமர்சனம். படம் அமீரகத்துக்கு வந்து விட்டதா? எங்கே காணலாம் என்ற விபரமும் தந்தால் நன்றாக இருக்கும்.

நாஞ்சில் பிரதாப் said...

ச்சே... ஊருக்குப்போயிருந்தபோது தியேட்டருல ரிலீஸ் ஆயிருந்துச்சு... பார்க்காம மிஸ் பண்ணிட்டேன்.... பகிர்வுக்கு நன்றி அண்ணாச்சி

கானா பிரபா said...

காத்திருக்கும் டிவிடிக்களில் இதுவும் ஒன்று

சென்ஷி said...

டிவிடி தந்துவத முடியுமா அண்ணாச்சி?

அபுஅஃப்ஸர் said...

அண்ணாச்சி இப்போதான்முதல் தடவை உங்க தளத்துலே படத்தின் விமர்சனம் படிக்கிறேன். நன்று

காலப் பறவை said...

மலையாள சினிமாக்கள் குறித்து தமிழில் வந்துள்ள திரை விமர்சனங்களில் ஆகச்சிறந்த விமர்சனங்களில் ஒன்றாக இதை பார்கிறேன்...... நன்றி அண்ணாச்சி..

ராஜா சந்திரசேகர் said...

முக்கியமான பதிவு..படத்தைப் பார்க்கவேண்டும்.நன்றி.

காலப் பறவை said...

அண்ணாச்சி திரைபடத்தின் முழு பெயர்
பாலேறி மணிக்யம் - ஒரு பாதி கொலபாதகதிண்டே கதா

தமிழ் பிரியன் said...

அதே...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

அறிமுகத்திற்கு நன்றி அண்ணாச்சி..!

பார்த்துவிடுகிறேன்..!

கோபிநாத் said...

யப்பா...பதிவு எல்லாம் வருதா இந்த பக்கம் ! ! ! !ரைட்டு அண்ணாச்சி ;))

ரெண்டு படத்துக்கும் நன்றி ;))

thiru said...

கலாச்சார காவலர்களுக்கு பயப்படாமல் இயக்குனர் மமூட்டியையும் ,சரய்வையுமொன்றாக தங்க வைக்கிறார் என்று சொல்கிரீர்களே?இதில் கலாச்சார மீறல் எங்கே?இந்த மாதிரி விஷயங்கள் தான் இந்தியாவில் சாதாரணாம் ஆயிற்றே?சரயு தான் SINGLE WOMAN.இதே சரயு கணவுடன் வாழும்போது தைரியமாக இன்னொரு ஆணுடன் படுக்கையை பகிர்வதாக காட்டினால் இன்னேரம் டைரக்டர் வூட்டுக்கு ஆட்டோ போயிருக்கும்

manjoorraja said...

பதிவுக்கு நன்றி ஆசிப்.

விரைவில் பார்க்க முயற்சிக்கிறேன்.

சென்ஷி said...

@ திரு..

நீங்க இன்னும் ஒரே கடல் படம் பார்க்கலையா?

LinkWithin

Blog Widget by LinkWithin