08 March 2010

புத்திசாலி பெண்கள்

இன்னைக்கு மகளிர் தினமாம் ஊரெல்லாம் ஒரே கோலாகலமா கெடக்கு. அதுக்கென்னடே இப்போன்னு ஏடாகூடமா கேட்டுப்போடாதிய. அப்புறம் ஆணாதிக்கவாதின்னு ஈயம் பித்தளைங்க எல்லாம் கோவிச்சுக்கும்

மகளிர் தினம் கொண்டாடுதாவல்லா..அதான் அவியளுக்காக ஒரு கதயச் சொல்லிட்டு ஓடிடுதேன் கேட்டியளா?

இப்படித்தான் ஒரு தடவை ஒரு ஆணாதிக்க பன்றிக்கும் (இப்படிச் சொன்னாத்தான் பொம்பளையலுக்குப் பிடிக்கும்) ஒரு பெண்ணாதிக்கப் பிசாசுக்கும் (இப்படிச் சொன்னாத்தான் எனக்குப் பிடிக்கும்:-) வாக்குவாதம். வந்துடுச்சு

”எல்லாத்தையும் விடுங்கடே! ஒரு பொம்பளையால ஏதாவது ரகசியத்தைக் காப்பாத்த முடியுமா? சரியான ஓட்ட வாய்ங்க எல்லாம்” என்றார் ஆணாதிக்கவாதி

பிசாசுக்குக் கோப்வம் வந்துடுச்சு பாத்துக்கிடுங்க. “அதெல்லாம் ஒரு மண்ணும் கெடயாது எங்களாலயும் எல்லா ரகசியத்தையும் காப்பாத்த முடியும். உதாரணத்துக்கு எனக்கு 21 வயசானதுலேருந்து என் வயசை இன்னைக்கு வரைக்கும் ரகசியமா வச்சிட்டிருக்கேன் தெரியுமா?” என்று அலட்சியமாவும் ஆவேசமாவும் சொல்லியிருக்கு

உடனே அந்த ஆளு “அதெல்லாம் இன்னும் கொஞ்ச நாளுதான். ஆனா எப்படியும் நீ அந்த ரகசியத்தைச் சொல்லத்தான் போற” அப்படின்னு சொல்லியிருக்கான்

அதுக்கு அந்தப் பொம்பள “ போய்யா போ! 27 வருஷமா ரகசியத்தைக் காப்பாத்துன என்னால இனியும் காப்பாத்த முடியாதா?’ன்னு சிரிச்சுகிட்டே கேட்டாளாம்.

அடேங்கப்பா! பொம்பளைங்கதான் எவ்வளவு புத்திசாலிங்க. மகளிர் தின வாழ்த்துகள்! (இது ஒண்ணுதான் கொறச்சல்)

16 பின்னூட்டங்கள்:

கண்ணா.. said...

அண்ணாச்சி ..இப்பதான் நீங்க கடையை தொறக்கவே மாட்டுக்கியேன்னு... குசும்பன் பதிவுல கமெண்ட் போட்டு வாறேன்... அதுகுள்ள பதிவா....

”ஆணா”லும் நீங்க ஆணாதிக்கவாதிதான் அண்ணாச்சி.. இல்லேன்னா இப்ப இத போடுவியளா....

அறிவிலி said...

அது ஏங்க.. லேபிள் சமையல்னு வெச்சீங்க...

சென்ஷி said...

// அறிவிலி said...

அது ஏங்க.. லேபிள் சமையல்னு வெச்சீங்க...//

வெந்திடுச்சா வேகலையான்னு செக் செஞ்சிட்டு இருப்பாரு போல :)

நாஞ்சில் பிரதாப் said...

அண்ணாச்சி,,,கதை சூப்பர்...
நீங்க நல்லவரா கெட்டவரா----,??

☀நான் ஆதவன்☀ said...

//அறிவிலி said...

அது ஏங்க.. லேபிள் சமையல்னு வெச்சீங்க...
//

சமையலுக்கு லேபிள்னு பேர மாத்தமுடியாதுல்ல... அதான் லேபிள சமையல்னு ஆக்கிட்டாரு

இப்படிக்கு
ஆணாதிக்கவாதி
நான் ஆதவன்

ராம் said...

நல்லாருக்கு போங்க...!

பெண்கள் எப்போதும் புத்திசாலிதான் .....!!

காலப் பறவை said...

:-))))))))))))))))

மோகன்தாஸ் said...

என்ன கொடுமை இது ஆசிப், உங்களால் எப்படி இதையெல்லாம் பேசமுடிகிறது. பெண்கள் இன்னிக்கு கால் பதிக்காத துறையே இல்லை. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஆணாதிக்க சண்முகத்திற்கு என் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறேன். நோ ஸ்மைலி.

இப்படிக்கு,
புதிதாய்க் கல்யாணமான,
மோகன்தாஸ்

கண்ணா.. said...

//மோகன்தாஸ் said...

ஆணாதிக்க சண்முகத்திற்கு என் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறேன் //

சண்முகத்திற்கு தெரிவிக்க வேண்டிய கண்டங்களை ஏன் அண்ணாச்சிக்கு தெரிவிக்குறீங்க.....

மோகன்தாஸ் said...

கண்ணா நீ இன்னும் வளரணும்பா!

செல்வேந்திரன் said...

இப்படித்தான் ஒரு தடவை ஒரு ஆணாதிக்க பன்றிக்கும் (இப்படிச் சொன்னாத்தான் பொம்பளையலுக்குப் பிடிக்கும்) ஒரு பெண்ணாதிக்கப் பிசாசுக்கும் (இப்படிச் சொன்னாத்தான் எனக்குப் பிடிக்கும்:-)

ha ha execellent!

Monks said...

அண்ணே படு சூப்பர்னே.
அடிக்கடி ஏதாவது இந்த மாரி கொளுத்திப் போடுங்னே!

- இன்னொரு ஆணிய வாதி :)

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஹிஹிஹி..

stellaselvam said...

ஏன் மக்கா? கேக்க ஆள் இல்லனா நெனச்சுபுட்டீக?அவ்ளோ பொறாமையா இருந்த நீங்க வேணா ஏப்ரல் 1 ஆடவர் தினம்னு கொண்டடிக்குங்க..நாங்க என்ன வேணாம்னா சொல்ல போறோம்.

அஷீதா said...

நாராயணா இந்த ஆணாதிக்கவியாதிகளோட தொல்லை தாங்க முடியல பா ...மூக்கு மேல குத்தனும் :)))))

ஒ.நூருல் அமீன் said...

ஹைப்பர் டென்ஷனைக் கலைக்கும் நகைச்சுவை ஆசிப் மீரானின் தனி சிறப்பு

LinkWithin

Blog Widget by LinkWithin