கவுஜ எழுதணும்னா வானத்துலேருந்து குதிக்கணும், வைக்கோலைக் கடிச்சுத் திங்கணும்னு நெறய பேரு நெனைக்குறாங்க போல. ஆனா, அதுக்கு இ-கலப்பை மட்டும் போதும் உழுது தள்ளிடலாம்னு சொல்றதுக்குத்தான் இன்னொரு கவுஜை. இந்த எழவை எழுதுறதுக்காக நான் புல்தரையில படுத்தேன், மோட்டுவளையை மொறச்சேன், உணர்ச்சியைக் கொட்டுனேன், உறங்காம தவிச்சேன், பிரசவம் பார்த்தேன், பிச்சை கூட எடுத்தேன்னுல்லாம் ரொம்ப ரொம்ப ஓவரா பீலா வுடுறதுக்கு நான் கவுஞன் இல்லை.
பாருங்க.. பதிவுப் பஞ்சம் வரும்போதெல்லாம் கைகொடுப்பதிந்த காதல் கவுஜைதான். ஆகவே, வாழ வைக்கும் காதலுக்கு 'ஜே'!!
காதலாலொரு....
உன் புன்னகையில்
உதிரும் மலர்கள் மட்டும்
வாடுவதேயில்லே எப்போதும்
நீ பேச வாய் திறக்கும்போதெல்லாம்
பேச்சற்றுப் போகிறேன்
உன் கண்கள்
பேசும்போது மட்டும்
காணாமல் போய் விடுவதில்
கொள்ளை மகிழ்ச்சி எனக்கு
உரிமையோடு நீ என்னை
கோபிக்கும்போது
பொங்கித் தெறிக்கும் உன் வார்த்தைகளில்
பொங்கி வழிகிறது என் மனது
நிறைகுடமாய்
களைத்த மனதிற்கு இதமான
மென்தொடுகைகளால்
உயிர்ப்பூட்டுகிறாய் நீ
உன் கரங்கள்
தொடும்போது
கழுவப்படுகின்றன என் கறைகள்
உன் அரவணைப்பில்அன்னையின்
அன்பைக் காண்கிறேன
சேயாய் மடிசாயும் என்
தலைமுடியைக் கோதும்
உன் விரல்களில்
தாய்மையின் கரிசனம் காட்டி
புதிதாய் பிறந்ததாய்
புலப்படச் செய்கிறாய்
என்னவென்று சொல்ல முடியாத
பரவசத்தில் படர வைக்கிறாய்
தளும்பிக் கிடக்கும் என் மனதை
இளைப்பாறக் கிடைத்த
தோள்களின்
மென்மையான வலிமையில்
மறக்கிறேன் என் சுமைகளை
அறியாமல் போன நாட்களின்
அந்திப் பொழுதுகளை
புரியாதிருந்த நாட்களின்
வெறும் கணங்களை
எண்ணிச் சிரிக்கிறேன்
வாழ்க்கையில் வசந்தம்
உன் பேரோடுதான்
வருகிறதென்பதை இப்போதுதான்
உணர்கிறேன்
அன்றாட வாழ்க்கையின்
அவஸ்தைகளுக்குள்ளும்
மூச்சிறுக்கம் இல்லாமல்
முழுமையாய் சுவாசிக்கிறேன்
எப்போதும்
நீ என்னோடு இருப்பதால்
********
எல்லாக் காலமும் நல்லா இருங்கடே!!
(இந்தக் கவுஜயப் படிச்சபொறவும் எப்படிடே?!ன்னு கேக்காதிய.சொல்லிட்டேன்)
21 பின்னூட்டங்கள்:
அண்ணாச்சி மறுமடியும் நீங்க கவிமடத்தலைவர்னு நிருப்பிச்சுட்டீங்க...
கவிபேரரசரே உங்க முன்னாடி கைக்கட்டி நிக்கனும்... அழுவாச்சியா வர்து அண்ணாச்சி...
//இந்த எழவை எழுதுறதுக்காக நான் புல்தரையில படுத்தேன், மோட்டுவளையை மொறச்சேன், உணர்ச்சியைக் கொட்டுனேன், உறங்காம தவிச்சேன், பிரசவம் பார்த்தேன், பிச்சை கூட எடுத்தேன்னுல்லாம் ரொம்ப ரொம்ப ஓவரா பீலா வுடுறதுக்கு//
அண்ணாச்சி இப்புடி பீலாவுடாமலே இப்படி கவிஜ எழுதுனா, இப்படியெல்லாம் செஞ்சு கவித எழுதுனா அல்லா கவிஞனும் பிச்சையெடுக்கனொம்லே
காதலர் தினம் அண்ணாச்சிக்கு மட்டும் விதிவிலக்கா என்னா
//(இந்தக் கவுஜயப் படிச்சபொறவும் எப்படிடே?!ன்னு கேக்காதிய.சொல்லிட்டேன்)//
:))
அண்ணாச்சீ! சூப்பர்!
:(
//இந்த எழவை எழுதுறதுக்காக நான் புல்தரையில படுத்தேன், மோட்டுவளையை மொறச்சேன், உணர்ச்சியைக் கொட்டுனேன், உறங்காம தவிச்சேன், பிரசவம் பார்த்தேன், பிச்சை கூட எடுத்தேன்னுல்லாம் ரொம்ப ரொம்ப ஓவரா பீலா வுடுறதுக்கு நான் கவுஞன் இல்லை//
ஸ்டார்டிங் காமெடியா ஆரம்பிச்சு ஃபினிஷிங் சீரியஸாவே கவிதை எழுதிட்டேளே அண்ணாச்சி....
இதுக்கு போய் ஏன் இந்த சென்ஷி பயபுள்ள சோக ஸ்மைலி போட்டுச்சுன்னு தெரியலை....
:))))
:-) ;-) :-)
அண்ணாச்சி கவிதை சூப்பர்தான்..!
ஆனா எழுதிக் கொடுத்தது யாருன்னு சொல்லிட்டீங்கன்னா அவருக்கு நன்றி சொல்லிருவோம்ல..!
அண்ணாச்சி, ரியாத்துக்கு ஒரு இஸ்பெசல் சாதா பார்சேல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்
சில மனங்கள்
கவிதையாய்
காதலில்
களிப்புறுகின்றன
அவற்றை தூரங்கள்
பிரிப்பதில்லை
தோழமையை
அன்பை
காதலை
பிரிவுகள் வந்தும்
பெருக்குகின்றன
ஆயிரம் முறை
சொல்வேன்
அருமையான
வாழ்வுக் கவிதை
அண்ணாச்சி!
அண்ணாச்சி என்னாச்சி கவிதையிலெ கலக்கிப்புட்டீக ..
சூப்பரு சூப்பரு ..
/// உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
அண்ணாச்சி கவிதை சூப்பர்தான்..!
ஆனா எழுதிக் கொடுத்தது யாருன்னு சொல்லிட்டீங்கன்னா அவருக்கு நன்றி சொல்லிருவோம்ல..! ////
உண்மைத் தமிழன் அண்ணே ! , அது நான் இல்லைன்னு உங்கள்ட்ட சொல்லாமலா இருக்கப் போறாரு அண்ணாச்சி .
கவிதை நல்லாயிருக்கு அண்ணாச்சி
அழகான, உண்மையான வார்த்தைகள்.
உங்கள நீங்களே கலாய்ச்சு, எங்களை கவுஜ எழுத ஊக்கம் தர்றத நினைச்சா, நாஞ்சில் பிரதாப் மாதிரி.. அவ்வ்வ்வ்..
2012 - ல் உலகம் அழியுதுனு ஒரு புரளி அலையுது. உங்க கவிதை அதை உண்மையாக்கிடும் போல இருக்கே...
அதெல்லாம் சரி அண்ணாச்சி. கவித, கவுஜன்னீங்களே எங்கே அது? அதச் சொல்லாம விட்டுட்டீங்களே
:(
சூப்பர்
புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.
தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://www.bogy.in
very nice........
good...........
அருமையான கவிதைகள்.....
http://aadaillathavarigal.blogspot.com/
Post a Comment