28 January 2010

பாவம்தான் ஜெயமோகன்!!

 //முதல் வரிசையில் தொட்டுவிடும் தொலைவில் உட்கார்ந்திருந்தவன் தன் சிறுகதை கூட படிச்சதில்லை என்பது தெரியாது போலும்.// கோவையில் நடந்த ஜெயமோகன் ரசிகர் மன்ற விழா நிகழ்ச்சி குறித்து
இணைய எழுத்தாளர் சஞ்சய் தனது வலைப்பதிவில் எழுதியது

//வந்திருந்த நூற்றியிருபதுபேரும் என் வாசகர்களாக இருந்தது உண்மையிலேயே ஆச்சரியமானது..//
இன்னொரு இணைய எழுத்தாளர் ஜெயமோகன் தனது பதிவில் அதே நிகழ்ச்சியைக் குறித்து சிலாகித்திருப்பது.

அடங்கொய்யால!!
முதல் வரிசையிலேயே தனது சிறுகதை ஒன்று கூடப் படிக்காத வாசகனை வைத்துக் கொண்டு உலக மகா இலக்கியக் கூட்டம் நடந்தது போல பில்டப் பண்ணுவதும் நவீன இலக்கியத்தில் ஒரு பகுதிதான் போல.

//என்னை ஆச்சரியப்படச் செய்தது விஷ்ணுபுரத்தையும் காடையும் நுட்பமாக வாசித்துக் கேள்விகேட்ட ஒரு இளம் வாச்கர்//
தனது வாசகர்கள் நுட்பமானவர்கள், தீவிர வாசிப்பாளர்கள் என்று வழக்கம் போல ஜல்லியடிப்பதற்காக உருகி வழியும் ஜெமோ,

//கா.சி சிவக்குமாரின் எழுத்தை சிலாகித்தவரிடம் சிவந்துவிட்டார்.// என்று சஞ்சய் எழுதியிருப்பது குறித்து காந்தியின் அடிப்பொடியாகவும் நேர்மையின் திருவுருவாகவும் கிடைக்கும் சந்துக்களிலெல்லாம் போதனை நடத்தும் ஜெயமோகன் தனது பதிவில் ஒருவரியாவது எழுதவில்லை.

// அவர் தரத்தில் தினம் ஐம்பதாயிரம் பக்கம் வருகிறதாம். அவர் தரம் போதுமென்றால் என் கூட்டத்திற்கு ஏன் வர வேண்டுமென்றார் அரசியல்வாதி ஜெமோ.//

”தனக்கு வந்தால் மட்டும் அது ’ஹிட்டு’. மற்றவன் அது பற்றிப் பேசினால் ’அதைப் போய் நொட்டு’ ” என்று சொல்லும் தனது அதிதீவிர வயிற்றெரிச்சல் வியாதியிலிருந்து இன்னமும் குணமாகாமல் இருக்கும் ஜெமோ விரைவில் குணமடைய நீங்களும் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுங்கள்

//சுஜாதா எழுதியது டெக்னாலஜி ஃபிக்‌ஷன் தான் சைன்ஸ் ஃபிக்ஷன் இல்லை என்றார். வேறுபாடு உள்ளதாம்.//  இதுவும் நண்பர் சஞ்சய் எழுதியதுதான்.

ஜெமோவுக்கு இருப்பது எழுத்து வியாதி என்று யாரோ சொன்னார்கள் பேச்சு வியாதியும் இருக்கும் போலிருக்கிறது. பாவம் !!


கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் பெரியாரைப் போட்டுப் பார்க்கும் ஜெமோவுக்கான இந்த எதிர்வினையையும் வாசித்து விடுங்கள்.. 

7 பின்னூட்டங்கள்:

ச.செந்தில்வேலன் said...

அண்ணாச்சி, அந்தக் கூட்டத்தில் நீங்களும் கலந்துகொண்டிருந்தால் எப்படி இருந்திருக்கும்? :))

கார்த்திக் said...

// இணைய எழுத்தாளர் சஞ்சய் //

அண்ணாச்சி தொழிலதிபர்,பிரபல
இதையும் கொஞ்சம் சேத்துக்குங்க பிளீஸ்

SanjaiGandhi™ said...

பத்த வச்சிட்டியே பரட்டை..

என் பதிவில் எழுதுவதை பிற இடங்களில் பயன்படுத்தும் முன், முன் அனுமதி பெற வேண்டும் என எழுத வச்சிடுவீங்க போல இருக்கே.. நான் எல்லாம் இவ்ளோ வொர்த் இல்லை அண்ணாச்சி.. அவ்வ்வ்வ்வ்வ்..

SanjaiGandhi™ said...

//முதல் வரிசையில் தொட்டுவிடும் தொலைவில் உட்கார்ந்திருந்தவன் தன் சிறுகதை கூட படிச்சதில்லை என்பது தெரியாது போலும்.//

ஆனாலும் கூட , நான் டவுசர் போட ஆரம்பிக்காத காலத்துலையே என் அண்ணன் விஷ்ணுபுரம் நாவலை மாங்குமாஙகு என்று படிப்பதைப் பார்த்து 25 பக்கங்களுக்கு மேல் படித்திருக்கிறேன் என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்.

சாருவை பற்றிய ஏராளமான செய்திகளை கேள்விப்படும் எனக்கு ஜெமோவின் நாகரிகம் பிடித்திருந்தது. கேள்விகளுக்கு தொடர்பில்லாமல் யாரையும் வம்பிழுக்கவில்லை. தொடர்பானவர்களை வம்பிழுத்தாரான்னு கேட்காதிங்க. அவர்களைப் பற்றிய தனது பதிலை மட்டும் சொன்னார்.. :)

காலப் பறவை said...

:-))))

குசும்பன் said...

//நிகழ்ச்சி குறித்து
இணைய எழுத்தாளர் சஞ்சய் தனது வலைப்பதிவில் எழுதியது
//

என்ன கொடுமை அண்ணாச்சி இது:(

//நான் டவுசர் போட ஆரம்பிக்காத காலத்துலையே என் அண்ணன் விஷ்ணுபுரம் நாவலை மாங்குமாஙகு என்று படிப்பதைப் //

மாமா நீ ஏகலைவன் மாதிரி மாமா, வேடிக்கை பார்த்தே இலக்கியவாதி ஆயிட்ட:)

குசும்பன் said...

//என் பதிவில் எழுதுவதை பிற இடங்களில் பயன்படுத்தும் முன், முன் அனுமதி பெற வேண்டும் என எழுத வச்சிடுவீங்க போல இருக்கே.. //

யாராவது உன் பதிவை படிப்பதே நீ போன ஜென்மத்தில் செஞ்ச ஒன்னு ரெண்டு புண்ணியம்:)இதுல எடுத்து எழுதுறாங்கன்னா ... ஒன்னும் சொல்வதுக்கு இல்லை

LinkWithin

Blog Widget by LinkWithin