“2011க்கு சொல்லுதியாக்கும்?”
“கிண்டல் பண்ணாதிய அண்ணாச்சி”
”எலே இதுல என்ன கிண்டல் இருக்கு? நம்ம தமிழ் திரைப்படத்துறை சார்ந்த பயலுவ அடிக்கிற கிண்டலை விடவா?”
”என்ன சொல்லுதிய?”
“திருட்டு விசிடியை ஒழிச்சதுக்கு முதல்வருக்குப் பாராட்டு விழாவாமே?”
“அண்டை வூட்டு நெய்யே என் பொண்டாட்டி கையேன்னு அவரு ஊரான் காசை எடுத்து இவனுவளுக்கு நெலமாவும் காசாவும் கொடுத்தா ஏன் பாராட்ட மாட்டானுவ? அதுசரி திருட்டு விசிடி எப்படி ஒழிஞ்சுதாம்?”
“ இப்பல்லாம் எவன் விசிடில படத்தை விக்கானுவ? எல்லாம் டிவிடிலதான?? அதான் திருட்டு விசிடியை ஒழித்த முதல்வருக்குப் பாராட்டு விழான்னு வச்சிருக்கானுவ. சரிதானே அண்ணாச்சி?”
“அப்ப சரிதாம்டே! ஆனா நெசம்மாவே திருட்டு திரைப்படம் மக்கள் பார்க்காம இருக்கணும்னா ஒரு வழி இருக்குடே!”
“என்ன அண்ணாச்சி?”
“பேசாம நம்ம முதல்வரே எல்லா தமிழ்ப்படத்துக்கும் கதைவ்சனம் எழுதிட்டாருன்னு வை.அப்புறம் எவன் திருட்டு விசிடி, டிவிடில படம் பாக்கப் போறான்??!”
“அடக்கடவுளே! அந்த எழவுக்கு வேட்டைக்காரனையே நாலுவாட்டிப் பார்க்கலாமே?”
“ஆமா. திருட்டு விசிடி தயார் செஞ்சா அதைக் கூட தண்டனையா கொடுக்கலாம்டே!”
“அதுசரி! நீரு வெளங்குற கதையை என்னைக்குப் பேசியிருக்கீரு?”
“நல்லா இருடே!!”
23 பின்னூட்டங்கள்:
என்னவே இப்படி சொல்லுதீரு...ஒரு நாளைக்கு நமக்காக முப்பது மணி நேரம் உழைக்காருலா, இதுக்கூட செய்யாட்டி எப்படி
என்னா பாசக்கிளிகள் -2ஆம் பாகமா,விடு ஜூட்........:)))))))))))))))))))))
அண்ணாச்சி..
சிரிப்பு சீப்பு சீப்பா வருது அண்ணாச்சி..!
இருபதே வரில ஒரு வரலாற்றையே உடைச்சுட்டியேண்ணே..!
:-)))))))))))))))))))))))))))
அண்ணாச்சி, ஊருப்பக்கம் போனா கும்மிடப் போறானுங்க, சாக்கிரதை
யோவ் சவத்துமூதி,எங்கய்யா போய் தொலைஞ்சீரு. நீரு இல்லாம பதிவுலகமே 'மொக்கை'யில்லாம சீரியஸா கெடக்குது.
விசிடி போயி மாமாங்கம் ஆகியும் இன்னம் அதையே ஏன் சொல்லிட்டு திரியறாங்கன்னு தெரியல. சில பேரு சிடியை கூட இன்னமும் கேசட்டுன்னே சொல்லிட்டு திரியறறானுவ. 'விழாவாடா' எடுக்கறீங்கன்னு ஜக்குபாயை இப்பவே வெளியே உட்டுட்டாட்ங்க. இப்பல்லாம் படம் ரிலீஸ் பண்றதுல தயாரிப்பாளர்கள விட நெட்டுக்காரங்கத்தான் பாஸ்டா இருக்காங்க.
ஹஹஹ அண்ணாச்சி ட்ரேட் மார்க்... பின்னிட்டீங்க அண்ணாச்சி...
சூப்பரா சொல்லிப்புட்டிய... எந்த பயலுகளக்கும் விளங்கமாட்டுக்கு...என்னப்பண்ண சொல்லுதிய??
//சுரேஷ் கண்ணன் said...
யோவ் சவத்துமூதி,எங்கய்யா போய் தொலைஞ்சீரு. நீரு இல்லாம பதிவுலகமே 'மொக்கை'யில்லாம சீரியஸா கெடக்குது.
//
அண்ணாச்சி இவருதான் அதுக்கு முக்கிய காரணம் அவன் அவன் புத்தக கண்காட்சிக்கு போய் வந்ததை ஒரு பதிவா சொன்னா, இவரு உ.த அண்ணன் குறும்படம் மாதிரி அம்மாம் பெருசு பெருசா ஒரு 10 பதிவு எழுதி பதிவுலகையே ரொம்ப சீரியஸா ஆக்கிப்புட்டாரு! இவரை கொஞ்சம் கவனியுங்க!
//“ இப்பல்லாம் எவன் விசிடில படத்தை விக்கானுவ? எல்லாம் டிவிடிலதான?? அதான் திருட்டு விசிடியை ஒழித்த முதல்வருக்குப் பாராட்டு விழான்னு வச்சிருக்கானுவ. சரிதானே அண்ணாச்சி?”//
அப்ப வீடியோ கேசட்டை நாங்கதான் ஒழிச்சோம் என்று பழயமுதல்வர் சொல்லமாட்டாங்களா அண்ணாச்சி?
//பேசாம நம்ம முதல்வரே எல்லா தமிழ்ப்படத்துக்கும் கதைவ்சனம் எழுதிட்டாருன்னு வை.//
இருந்தாலும் உங்களுக்கு இப்படி ஒரு விபரீத கற்பனை ஆவாது அண்ணாச்சி! என்னா டெரர்ரா யோசிக்கிறீங்க?:))
//ஒரு 10 பதிவு எழுதி //
குசும்பன்: இன்னும் அந்த சீரிஸ் இன்னும் முடியல. அதனால கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. :-)
//பேசாம நம்ம முதல்வரே எல்லா தமிழ்ப்படத்துக்கும் கதைவ்சனம் எழுதிட்டாருன்னு வை.அப்புறம் எவன் திருட்டு விசிடி, டிவிடில படம் பாக்கப் போறான்??!//
முதல்ல முதல்வர்ட்ட சொல்லி இந்த தமிழ் ப்ளாக்கை ஒழிக்க சொல்லணும்.
இந்த ரிஸஸன்லயும், அதும் குறிப்பா அமிரகத்துல ஆபிஸ் வேலையே நடக்க மாட்டுக்குன்னு போர்டு மீட்டிங் போட்டு பேசுற அளவுக்கு நிலைமை மோசமாயிட்டு..
திருட்டு விசிடியை ஒழித்தது போல் கலப்படக்காரர்கள்,ரியல் எஸ்டேட் மோசடிக்காரர்கள்,அரசாங்க இடத்தை ஆக்கிரமித்தவர்கள் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தால் நன்றாக இருக்கும்.
அடடா இந்த கார்த்தியும் இங்க வந்தாச்சா....
அவருதான் பாஸு.. அவரும், ஹாலிவுட் பாலாவும்தான் ப்ளாக்ல பட விமர்சனம் மட்டும் போடாம டவுண்லோடு பண்ண லிங்க்ம் குடுப்பாங்க...
( எத்தன நாள் மேட்டர் பட லிங்க் கேட்டேன்.. குடுக்கலேன்னா இப்பிடிதான் மாட்டி விடுவேன்..)
205வது ஃபாலோவர்
மொய் எழுதியாச்சு...
//“ இப்பல்லாம் எவன் விசிடில படத்தை விக்கானுவ? எல்லாம் டிவிடிலதான?? அதான் திருட்டு விசிடியை ஒழித்த முதல்வருக்குப் பாராட்டு விழான்னு வச்சிருக்கானுவ. //
ரசித்தேன்...
இப்போவெல்லாம் ஃபிளாஸ் டிரைவ்லே வருதாமுலே?
auto varathunu thairiyam polruku...
/“பேசாம நம்ம முதல்வரே எல்லா தமிழ்ப்படத்துக்கும் கதைவ்சனம் எழுதிட்டாருன்னு வை...//
சூப்பர்
//இப்பல்லாம் எவன் விசிடில படத்தை விக்கானுவ? எல்லாம் டிவிடிலதான?? அதான் திருட்டு விசிடியை ஒழித்த முதல்வருக்குப் பாராட்டு விழான்னு வச்சிருக்கானுவ//
அட ஆமா இல்ல ;)
அன்புடன்
சிங்கை நாதன்
ஆமாவா இல்லையான்னு மொக்கையா திருப்பி கேக்கக்கூடாது.
அன்புடன்
சிங்கை நாதன்
:-)
ஓய் சாத்தான் குளம்
அந்த பாராட்டு விழாவே கலைஞர் தொலைக் காட்சியில் வரக்கூடாதென அந்நிகழ்ச்சியையும் திருட்டுத்தனமான கேபிளில் ஒளிபரப்ப முயற்சி நடக்குதுங்கானும்
கலக்கிடீங்க அண்ணாச்சி.
நேரம்கிடைக்கும்போது இங்கும் வந்துபாருங்க.
http://fmalikka.blogspot.com/
தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here
Post a Comment