தேசிய விருதுகளெனும் சடங்குகள் ஒருவழியாக அறிவிகப்பட்டேவிட்டன. சிறந்த நடிகராக பிரகாஷ்ராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.சில இடங்களில் அவரது வழக்கமான வணிகப்பட தோரணைகளும் முகபாவங்களும் வெளிப்பட்டாலும் நன்றாகவே இருந்தது அவரது நடிப்பு.இந்த விருது ஷாரூக் கானிடமிருந்து தட்டிப்பறிக்கப்பட்டது போல நண்பர் சூனாகானா தனது பதிவில் எழுதியிருக்கிறார். ஆனால் மோகன்லாலுக்கும் பிரகாஷ்ராஜூக்கும் இடையில்தான் கடும்போட்டி நிகழ்ந்ததாகவும் 12 ஜூரிகளில் ஆறு பேர் பிரகாஷ்ராஜுக்கும் ஆறுபேர் லாலேட்டனுக்கும் வாக்களித்ததால் ஜூரியின் தலைவர் தனது வாக்கை பிரகாஷ்ராஜுக்கு வழங்கி அவருக்கு விருது கிடைக்குமாறு செய்தாரென்றும் ஏசியாநெட் சொல்லிக் கொண்டிருந்தது. உண்மை என்னவென்று உங்களைப் போலவே எனக்கும் தெரியாது.பெரியார் படத்துக்கு விருது கொடுத்தது பற்றி சூனாகானா வழக்கம்போல புலம்பியிருந்தார் :-) ஆனால் எனது கடுப்பு அந்த விருது பற்றியதல்ல. மாறாக அடூர் கோபாலகிருஷ்ணன் என்ற ஆத்மாவுக்கு சிறந்த இயக்குனருக்கான விருது வழங்கப்பட்டது குறித்துத்தான்।
ங்கொய்யால்! அந்தப் படத்தைப் பார்த்துட்டு 'இதுல என்னய்யா இருக்கு'ன்னு விமர்சனமும் எழுதிட்டோம்। அந்தக் காலத்துல நம்மூருல இருந்த கே.வி.கோபாலகிருஷ்ணன் படத்துலதான் யாராவது இறந்து போயிட்டா உடனே தென்னை ஓலை விழுறதைக் காட்டுவாங்க। அதைத்தான் செஞ்சு கிழிச்சிருந்தாரு।நான்கு கதைகளைச் சிறப்பாக ஒருங்கிணைத்ததற்கு இந்த விருதாம்। அட எருதுகளா? இதுக்கெல்லாமா கொடுப்பீங்க விருது?!என்ன கொடுமை இது சூனாகானா?
என் நண்பன் ஒருத்தன் ஒரு விசயம் சொல்வான்। அடூர் படம் வந்துச்சுன்னா "எலே! அந்தப் படத்துக்கு தயவுசெஞ்சு விருது கொடுத்துடுங்கலே! இல்லேன்னா பார்த்துத் தொலைய வேண்டியிருக்கும். மனுசன் உக்காந்து பார்ப்பானா அதை'ன்னு படத்தைப் பார்க்காமலேயே விருதைக் கொடுத்துடுவானுங்களாம். திராபையான அடூர் படங்களுக்கெல்லாம் விருது கிடைக்குறதைப் பார்த்தா அது நிரூபணமாகுற மாதிரிதான் இருக்கு.
ஆறு
தலான ஒரே விசயம் 'ஒரே கடலுக்குக்' கிடைத்த அங்கீகாரம். இந்தப் படத்திற்காக மம்மூட்டியின் பெயரும் சிறந்த நடிகர் தேர்வில் ஆரம்பத்தில் இருந்ததாம். ஆனால் பாருங்க சூனாகானா, மீராவுக்கு சிறந்த நாயகி விருதைக் கொடுத்திருக்கலாம் இந்தப் படத்திற்காக.அதையும் கெடுத்துப்புட்டானுங்க.எப்படியோ,
நல்லா இருந்தா சரிடே!!
5 comments:
சுவாரசியமான பதிவு.
ஒரே கடல் படத்தில் மீரா ஜாஸ்மின், மம்முட்டி ரெண்டு பேர் நடிப்பும் சூப்பர். ஒரிஜினல் சி.டி. கோயமுத்தூர்லயே கிடைச்சுது.
அட... சாமி...!! இதுக்குள்ள இம்புட்டு உள்குத்தா.....???
adoor gopalakrishnan padaththukku ezuthiya comments---simply superb...
nalla vilasuriinga Mr.Asif
மீரா ஜாஸ்மினின் புகைப்படத்தை பதிவில் ஏற்றியமைக்கும் மீராவிற்கு விருது கிடைக்காமையை சுட்டிக்காட்டியதற்கும் மகிழ்கிறோம் :-))
(இம்புட்டு விரிவா கமெண்ட் இல்லைன்னா தப்பாப் போயிடும். அதான் டீடெய்ல்டு எக்ஸ்பிளேனேசன்!)
Post a Comment