16 July 2009

அமீரகத்தில் சக்திக்கு பாராட்டு விழா மாநாடு

"அண்ணாச்சி ஒரு வாரமா கலவர பூமியில இருந்த தமிழ்மணத்தின் வாசகர்களை காமெடி பூமிக்கு அழைத்து சென்ற அண்ணன் சக்திவேலுக்கு அமிரகத்தின் சார்பாக ஏதாவது செய்யனும்..."

இப்படி நான் ஆதவன் ஒரு கோரிக்கை வைத்திருப்பதாலும், சமீபத்திய பதிவுலக சர்ச்சைகள், சக்திவேலின் தனிமனிதப் போர்குணம் போன்ற அதிமுக்கிய பிரச்னைகளை நேர்கொள்ளும் விதமாகவும், 'சுவாரஸ்ய பதிவர் விருதுகளைப் பெற்ற அமீரகப் பதிவர்களைப் பாராட்டும் விதமாகவும், ஒன்றாக சந்தித்து பேசி பல காலம் ஆகி விட்டதென்பதாலும், அடிக்கும் வெயிலுக்கு ஆறுதலாக மொக்கை போடலாமென்பதாலும்.. மிகமுக்கியமாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக இருப்பதாலும் அமீரகப் பதிவர்கள் மாநாடு ஞாயிற்றுக் கிழமை மாலை ஆறு மணிக்கு கராமா தமிழ்ப்பதிவர் பூங்காவில் வைத்து நடைபெறவிருக்கிறது.

அமீரகப் பதிவர்கள். அனானிகள், பதிவை வாசிப்பவர்கள், வாசித்து கடுப்பானவர்கள் என எவராக இருந்தாலும் விழா ஒருங்கிணைப்பாளரும் அமீரகப் பதிவர் சங்கத் தலைவருமான திருமிகு.குசும்பன் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டோ அல்லது இந்தப் பதிவில் பின்னூட்டமிட்டோ தங்கள் வருகையை உறுதிப்படுத்தவும்

மேலதிக விபரங்களுக்கு:

குசும்பன் - 050 266 41 31
சென்ஷி - 050 314 60 41

26 comments:

குசும்பன் said...

உத்தரவு எசமான்!:))))

நாகா said...

உள்ளேன் அய்யா..

சென்ஷி said...

சரிங்கோ அண்ணாச்சி :)))

கோபிநாத் said...

ரைட்டு...;)

☀நான் ஆதவன்☀ said...

இப்படி கோர்த்து விட்டுட்டீகளே அண்ணாச்சி :) ரைட்டு வந்திடுவோம்

எம்.எம்.அப்துல்லா said...

எனக்கு பதிவர் சந்திப்பில் கலந்துக்க பிளைட் டிக்கெட் ஸ்பான்ஸர் பண்ணப்போற அதிர்ஷ்டசாலி அமீரகப் பதிவர் யாரு??யாரு?யாரு???(எக்கோ ஸ்டைலில் படிக்கவும்)

:))

நாமக்கல் சிபி said...

ஓட்டுப் போட்ட அனைவருக்கும் சக்தி அவர்கள் விமானக்கட்டணம் வழங்குவார்!

Suresh Kumar said...

நாமக்கல் சிபி said...

ஓட்டுப் போட்ட அனைவருக்கும் சக்தி அவர்கள் விமானக்கட்டணம் வழங்குவார்!////////////////////////////

நானும் ஒட்டு போட்டேன்

வெண்பூ said...

ஆசிப் அண்ணாச்சி... ரொம்ப நாளு கழிச்சி ஒரு கைப்புள்ள கிடைச்ச உடனே இந்த கும்மு கும்முறீங்களே எல்லாரும்... சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாப்போச்சி...

அக்னி பார்வை said...

சந்திப்பு வெற்றி பெறவும், மொக்கைகள் தழைக்கவும், அமிரக பதிவர்கள் பல புதிய திட்டங்கள் தீட்டவும் வாழ்த்துக்கள்

அது ஒரு கனாக் காலம் said...

வந்திடுவோம்

கலையரசன் said...

சுந்தர்ராமன் சார் வந்தா போதாது...
வடை முக்கியம்! அங்ங்ங்ங்!!

வால்பையன் said...

நானும் வர்றேன்!

டிக்கெட் அனுப்புங்க!

மின்னுது மின்னல் said...

வாழ்த்துக்கள் :)

ஜோ/Joe said...

துபாய் பஸ்ஸ்டாண்டுல இருந்து எப்டி வர்றது?

ச.செந்தில்வேலன் said...

அண்ணாச்சி..

கண்டிப்பா வந்திடறேன்.

shabi said...

ஒரு சந்திப்ப அபுதாபில வைக்கலாமே

அபுஅஃப்ஸர் said...

உள்ளேன் ஐயா..

குடுகுடுப்பை said...

அதிக வேலையில் மன உலைச்சலில் இருந்தேன் சக்திவேல் கலவரப்படுத்துற அளவுக்கு சிரிக்கவெச்சுட்டார்

கீழை ராஸா said...

"தமிழ் பதிவர் உலக தந்தை அண்ணாச்சி அழைக்கிறார்..."???என்ற விளம்பரம் கண்டு (கொடுத்த காசுக்கு இவ்வளவு தான் புகழ முடியும்.. அண்ணாச்சி)
மாநாடு எதாவது "மா"ஹாலில் இருக்கும் என்று எதிர்பார்த்து வந்தால் மரத்தடியிலா..?

//கராமா தமிழ்ப்பதிவர் பூங்காவில்//
ப்ளாட்பார்மில் என்பதை எவ்வளவு டீசண்டா சொல்றீங்க...(வடை போச்சே)

என்ன பண்றது ரொம்ப கம்பல்பண்றேள்...காலையிலே இருந்து குசும்பன் வேறே நீங்க வந்தே ஆகணும்னு போனுலே ஒரே அழுகை...இட்ஸ் ஒகே வருகிறேன்...

(அனானி:இந்த பில்டப்புக்கு உனக்கு ஆட்டோ ரெடிடி..)

அண்ணாச்சி...பார்க்குக்கு பேர் வச்ச விபரம் சேக் முகம்மதிற்கு தெரியுமா...?

நாஞ்சில் நாதம் said...

:))))))

ஜோசப் பால்ராஜ் said...

//எம்.எம்.அப்துல்லா said...
எனக்கு பதிவர் சந்திப்பில் கலந்துக்க பிளைட் டிக்கெட் ஸ்பான்ஸர் பண்ணப்போற அதிர்ஷ்டசாலி அமீரகப் பதிவர் யாரு??யாரு?யாரு???(எக்கோ ஸ்டைலில் படிக்கவும்)

:))

//

எனக்கும் ஸ்பான்ஸர் பண்ணப் போற அந்த ரெண்டாவது அதிர்ஷ்டசாலி யாரு?

ICQ said...

தலைவர் சக்திவேல் நாமம் வாழ்க.

Anonymous said...

engkalukkellam idam unda

ஊர்சுற்றி said...

மாநாடு வெற்றிபெற வாழ்த்துக்கள்.

கலையரசன் said...

இந்தா பிடிங்க மெடலை

LinkWithin

Blog Widget by LinkWithin