09 June 2008

பதிவுலகமும் மலச்சிக்கலும்

"காலைல எழுந்ததும் வெளிக்குப் போற மாதிரி மறக்காம தெனம் ஒரு பதிவு போட்டு பதிவுலகத்தை வாழ வைக்குறதுக்குன்னே இருக்கானுங்க அண்ணாச்சி கொஞ்சம் பேரு" என்று மெதுவாகத் தொடங்கினார் நண்பர்
"அதுக்கென்ன?"
"என்னய்யா அநியாயமா இருக்கு? ஒண்ணுக்குப் போறது வெளிக்குப்போறதெல்லாமா பதிவா போடுறது?" என்றார்.
அவர் எங்கே வருகிறார் என்று எனக்குப் புரிந்து விட்டது.
"அதுக்கென்னய்யா இப்போ?" என்றேன்.
"அண்ணாச்சி, நீங்க கூட தெனம் ஒரு பதிவு போடுவீங்களே? இப்ப போடுறதில்லையா? என்றார். 'இதுக்குத்தானே இந்தப் பாடுபட்டாய்' என்று நினைத்துக் கொண்டு சொன்னேன் "கொஞ்ச நாளா எனக்கு மலச்சிக்கல்" என்று.

**************************

முகம் சுளிக்க வைக்கும் (சுழிப்பதா? சுளிப்பதா?) ஆபாசத் தலைப்புகள்தான் சூடான் பதிவுகளில் இடம் பிடிக்கிறது என்பதில் தனக்கு உடன்பாடில்லை என்பதை சிக்ரெட் பிடிப்பதை இன்னமும் விடுபடாமல் காத்து வரும் பாலபாரதி ஸ்வாமிகள் திருவாய் மலர்ந்தருளியிருந்தாலும் உண்மை அதுவன்று.

மாலை நாளிதழ்களின் நிலையில்தான் இன்று பதிவர்களும் இருக்கிறார்கள்.'நடிகை தற்கொலை' என்று விளம்பரப்படுத்தியிருப்பதைப் பார்த்து வாங்கிப் படித்தால் 'சுமார் 40 ப்டங்களில் ஏழாவது வரிசையில் எட்டாவதாகவோ ஒன்பதாவது வரிசையில் ஏழாவதாகவோ ஆடிய துணைநடிகை' தற்கொலை செய்து கொண்டிருப்பதை அறிந்து கொலைவெறி வரும் காசு கொடுத்தவனுக்கு. அதே பரபரப்பு உத்திதான் இங்கும் வேலை செய்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. வெறும் ஆபாசத் தலைப்புகள் மட்டுமே இல்லாமல் கொஞ்சம் புத்திசாலித்தனமான தலைப்புகளும் ஆட்களை ஈர்க்கவே செய்யும்.

இந்தத் தலைப்பையே பாருங்கள். 'மலச்சிக்கலைப் பத்தி நமக்கென்ன கவலை?'ன்னு மூக்கைப் பொத்திக்கிட்டு போகாம படிச்சுக்கிட்டு இருக்கீங்களே? (சந்தடிச்சாக்குல டாக்டர் விஜய் மாதிரி புத்திசாலித்தனம்னு சொல்லிட்டேன் பாருங்க)இந்தப் பெருந்தன்மை(!!!)தான் என்னை மாதிரி ஆட்களுக்கு மொக்கை போட நல்ல தளமா இருக்கு :-)(அதுக்காக ஒரேயடியா போயிடாதீங்கடே!!)

ஆனாலும் கொஞ்ச நாளிலேயே இந்த ஆட்டம் அலுத்துப் போய், 'சவத்து மூதிக்கு வேலை இல்லை' என்று மக்கள் கண்டு கொள்ளாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது.அதனால மக்கள் மனநிலைக்கு ஏத்த மாதிரி அவ்வப்போது 'எளக்கியவாதி' அவதாரமும் எடுக்கணும். அதையும் கவனமாச் செய்யணும். ஒரேயடியா நவீன எளக்கியம் பேச ஆரம்பிச்சுட்டா, 'எழவெடுத்த பயலால்லா இருக்கான். இவனை என்னத்தப் படிக்க?'ன்னு வழக்கமா வாசிக்குறவன் கழண்டுக்குவான். ஏற்கெனவே எளக்கியவாதியா ஆனவன், ஆகிக்கிட்டிருக்குறவன், ஆக முயற்சி செய்பவன் எவனும் படிச்சவன் தேர்தல்ல வாக்களிக்கப் போகாத மாதிரி பின்னூட்டம் போட வரவே மாட்டான். அதனால அதையெல்லாம் அனுசரிச்சு ஒட்டு மொத்தமா குமுதம் மாதிரி தீராநதி, ஸ்நேகிதி, ரிப்போர்ட்டர், பக்தின்னு கலந்து கட்டி மசாலாவை அரைச்சுக் கொடுக்கணும். அப்பத்தான் சூடாகும்.

நல்ல பதிவுகளும் விற்பனையாகும். விற்கின்ற மனிதர் ஏற்கெனவே அறிமுகமான பிரபல பதிவராக இருந்தால் மட்டுமே. ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம் - எப்பொழுதாவது வெற்றி பெறும் நல்ல தமிழ்ப்படம் போல.

பிரபல பதிவர்கள் பின்னூட்டம் இட்டால்கூட கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. நான் பின்னூட்டத்துக்குப் பதில்கள் இடுவதில் காட்டும் சோம்பேறித்தனத்துக்காக என்னைப் பிரபலப் பதிவராக்கி அழகு பார்க்கும் அண்ணாச்சிகளுக்கு நன்றி!! :-)

******************************

சந்தோஷ் சுப்ரமணியத்தை இப்போதுதான் பார்க்க முடிந்தது. அமெரிக்காவில் இருக்கும் தமிழர்கள் எல்லாம் கோட்டிக்காரர்கள் என்பதை வெளிப்படுத்தும் இன்னொரு படம். சிவாஜியில் அமெரிக்க என்.ஆர்.ஐக்களை எல்லாம் கூமுட்டைகளாகக் காட்டினார்கள். இதிலும் பூடகமாக அதையே சொல்லியிருக்கிறார்கள். கௌசல்யா எப்போது பார்த்தாலும் அமெரிக்காவில் இருக்கும் கண்வனுடன் பேசிக் கொண்டேயிருக்கிறார். 24 மணி நேரமும் எவனாவது பெண்டாட்டியுடன் பேசிக் கொண்டிருக்க முடியுமா? அதுவும் 'விட்டு விலகி நின்று' கடல் கடந்து போன பின்பும் 'ரேஞ்சு கிடைக்கலைம்மா'ன்னு பொய் சொல்லக் கூடத் தெரியாத அளவுக்கா லூசுப்பசங்க இருக்கானூங்க அமெரிக்காவுல? அட தேவுடா!!

சரி ப்டத்துக்கு வரலாம். அரை லூசா இருக்குர ஒரு பொண்ணைப் பார்த்ததும் நாயகனுக்கு 'லவ்ஸ்' வருதுன்னா அவன் முழுலூசாத்தானே இருக்கணும். கொடுமைடா சாமி! குழந்தை மனதுக்கும் குழந்தைத்தனத்துக்கும் வித்தியாசம் தெரியாம .. சரி விடுங்க. இருந்தாலும் 'சிவாஜி' 'குருவி'ன்னு தமிழ்ப்படத்தை உலகத்தரத்துக்கு எடுத்துட்டுப் போற எந்த முயற்சியும் செய்யாத ஒரே காரணத்துக்காகவே படம் நல்லா இருந்ததுன்னு சொல்லலாம்.

*********************

வடகரை வேலன்னு ஒரு நண்பர்
"ஜெயமோஹன் தனது வலைத்தளத்தில் நல்ல கட்டுரைகளைப் பதிவு செய்கிறார்.
பொதுவாக அவரை வலைப்பக்கங்களில் திட்டுபவர்களே அதிகம்.
ஒருவரைப் பற்றிய முன்கூட்டியே உருவாக்கிக் கொண்ட பிம்பத்தின் அடிபடையில் விமர்சிப்பதைத் தவிர்த்து, எழுத்துக்களையும் படைப்புக்களையும் விமர்சிப்பது ஆரோக்யமானது."
அப்படின்னு எழுதியிருக்கிறார். ஆனால் அவரது பக்கத்தின் மேய்ச்சல் நிலத்தில் என் பெயர்தான் முதலில் இருக்கிறது. என்னைப் பற்றித்தான் சொல்கிறாரோ என்று நினைத்து மகிழ்ந்து போனேன். அப்புறம்தான் தெரிந்தது. சாருவின் இந்தப் பதிவைப் படித்து விட்டுத்தான் சொல்லியிருக்கிறார் என்று. ( இந்த சுட்ட்டியை எனக்கு அனுப்பிய தம்பி சொல்லியிருந்தது இதுதான் . கண்ண கட்டும் ஆனா படிச்சு பாருங்க. அப்பதான் நாங்கள்லாம் எவ்ளோ வெட்டியா இருக்கோம்னு தெரியும் . இவர் இப்படி டிஸ்கி போடாட்டாலும் வெட்டியாத்தான் இருக்காருன்னு எங்களுக்குத் தெரியாதாக்கும்?!)

*************************

பாலபாரதி தன் பதிவில் பாபா தனது கூட்டத்துடன் தனியாவர்த்தனம் செய்வது குறித்து வருத்தப்பட்டிருந்தார். சென்னை பதிவர் சந்திப்பில் சென்னையிலேயே இருக்கும் சில (அறிவுஜீவிகளாக தங்களை பாவித்துக் கொள்ளும்) சென்னைப்பதிவர்கள் எல்லாம் எப்போதும் கலந்து கொள்ளாமல் இருப்பதன் மர்மம் என்ன? (அப்பாடா!! நம்ம வேலை முடிஞ்சது :-)

21 comments:

முரளிகண்ணன் said...

\\ஏற்கெனவே எளக்கியவாதியா ஆனவன், ஆகிக்கிட்டிருக்குறவன், ஆக முயற்சி செய்பவன் எவனும் படிச்சவன் தேர்தல்ல வாக்களிக்கப் போகாத மாதிரி பின்னூட்டம் போட வரவே மாட்டான்.\\

நச்சுன்னு இருக்கு அண்ணாச்சி

Anonymous said...

Genelia-vai arai-loosu enrezuthiya annaachi-yai ethirthu maanilam thazuviya kandanap paerani viraiil nadaiperum yena thevithukk kolgiraen.

Genelia "piththan"

அதிஷா said...

பின்னூட்டமா அப்படினா?????

நாஞ்சில் பிரதாப் said...

//மாலை நாளிதழ்களின் நிலையில்தான் இன்று பதிவர்களும் இருக்கிறார்கள்.'நடிகை தற்கொலை' என்று விளம்பரப்படுத்தியிருப்பதைப் பார்த்து வாங்கிப் படித்தால் 'சுமார் 40 ப்டங்களில் ஏழாவது வரிசையில் எட்டாவதாகவோ ஒன்பதாவது வரிசையில் ஏழாவதாகவோ ஆடிய துணைநடிகை' தற்கொலை செய்து கொண்டிருப்பதை அறிந்து கொலைவெறி வரும் காசு கொடுத்தவனுக்கு. அதே பரபரப்பு உத்திதான் இங்கும் வேலை செய்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. வெறும் ஆபாசத் தலைப்புகள் மட்டுமே இல்லாமல் கொஞ்சம் புத்திசாலித்தனமான தலைப்புகளும் ஆட்களை ஈர்க்கவே செய்யும்.//


"ரிப்பீட்டே".....

Sen22 said...

//சரி ப்டத்துக்கு வரலாம். அரை லூசா இருக்குர ஒரு பொண்ணைப் பார்த்ததும் நாயகனுக்கு 'லவ்ஸ்' வருதுன்னா அவன் முழுலூசாத்தானே இருக்கணும். கொடுமைடா சாமி! குழந்தை மனதுக்கும் குழந்தைத்தனத்துக்கும் வித்தியாசம் தெரியாம .. சரி விடுங்க. இருந்தாலும் 'சிவாஜி' 'குருவி'ன்னு தமிழ்ப்படத்தை உலகத்தரத்துக்கு எடுத்துட்டுப் போற எந்த முயற்சியும் செய்யாத ஒரே காரணத்துக்காகவே படம் நல்லா இருந்ததுன்னு சொல்லலாம்.//

இதை நான் வழிமொழிகின்றேன்....

கோவி.கண்ணன் said...

ஆசிப் அண்ணாத்தே,

நானும் 4 4 ஆக பதிவு எழுதவில்லை. மருத்தவரைப் பார்த்து 'சிக்கலை' தீர்க்கனும்.
:)

ஆசிப் மீரான் said...

//நச்சுன்னு இருக்கு அண்ணாச்சி//

அப்படிங்களா முரளி? நான் உள்ளதத்தான் சொன்னேன் :-)

அனானி அண்ணாச்சி,

நான் ஜெனிலியாவை அரைலூசுன்னு எப்ப சொன்னேன்? நான் சொன்னது கதாபாத்திரத்தை. அப்படியே அது அரை லூசா இருந்தாத்தான் என்னவாம்? :-))

ஆசிப் மீரான் said...

அதிஷா,

வாங்க வாங்க. பின்னூட்டம்னா நான் யாருக்கும் போடாதது. எனக்கு மட்டும் மக்கள் போடணும்னு எதிர்பார்ப்பது.

உங்க வீட்டுக்கு வந்தா என்ன தருவே? என் வீட்டுக்கு வந்தா என்ன கொண்டு வருவே? இதுதான் நம்ம கொள்கை :-)

ஆசிப் மீரான் said...

நாஞ்சில் பிரதாப்

ரிப்பீட்டேக்கு நன்றி.
மாலை முரசு படிச்சு ரொம்ப நொந்து போன்ன கூட்டத்துல நீங்களும் ஒரு ஆள் போலிருக்கு :-)

சென்22

வழி மொழிஞ்சதுக்கு நன்றிங்க.

ஆசிப் மீரான் said...

கோவி அண்ணாத்தே,

நல்ல வாழைப்பழம் சாப்பிடுங்க
ஆனா பழம் மட்டும் சாபிட்டுடுங்க.

அதை விட்டுட்டு தோலுரிச்சு தரட்டுமான்னு கடைக்காரன் கேட்டான். சரின்னு சொன்னேன். அப்புறம் தோலுரிச்சு தந்ததுக்கு தனியா காசு கேட்டான். கடைக்கு முன்னால நின்னதுக்கு வாடகை கேட்டான். மொத்தமா 100 வெள்ளி செலவாச்சுன்னு பதிவு மட்டும் போட்டுடாதீங்க :-)

Sridhar Narayanan said...

ஜெயமோகனின் பதிவு நல்லதொரு வாசிப்பனுபவம். ஒரு 10-15 வருட அனுபவத்தை அழகாக அருமையாக விவரித்திருந்தார். மனம் சிலிர்த்தது என்னவோ உண்மைதான்.

எப்பொழுதும் அவரது எழுத்தை திட்டவோ / கலாய்க்கவோ செய்யும் அறிவுசீவிகள் (உங்களைச் சொல்லலைங்க) என்ன எதிர்வினை செய்யப் போகிறார்கள் என்ற ஆர்வமும் எழுந்தது. :-)

ஆனால் சாருவின் எதிர்வினை கேவலமாக இருந்தது. அவர் ஜெயமோகனின் பதிவை படிக்காமலே வரிந்துகட்டிக் கொண்டு, தாக்குவதே நோக்கமாக... நெசமாவே கணணை கட்டிக் கொண்டுதான் வந்தது. இப்பொழுதெல்லாம் அவரைப் படிக்க ஆர்வமே வருவதில்லை.

ஆனால் ஒரு விசயம். எனக்கு தெரிந்த பலரும் 'இது என்ன சார் பள்ளிக்கூட முறை... குழந்தைகளுக்கு சிந்திக்க சுதந்திரம் இல்லை. எப்ப பாத்தாலும் போட்டி, ரேங்க் என்று கடிவாளம் போட்ட மாதிரி' என்று சலித்து கொள்கிறார்கள்.

ஆனால், உயர்தர பள்ளியாக பார்த்து (அவர்களாக 'உயர்தரம்' என்று நினைத்துக் கொண்டு) விண்ணப்ப படிவம், சிபாரிசு கடிதம் என்று வாங்கி கொண்டுதான் இருக்கிறார்கள். :-)

கோவி.கண்ணன் said...

அதை விட்டுட்டு தோலுரிச்சு தரட்டுமான்னு கடைக்காரன் கேட்டான். சரின்னு சொன்னேன். அப்புறம் தோலுரிச்சு தந்ததுக்கு தனியா காசு கேட்டான். கடைக்கு முன்னால நின்னதுக்கு வாடகை கேட்டான். மொத்தமா 100 வெள்ளி செலவாச்சுன்னு பதிவு மட்டும் போட்டுடாதீங்க :-)//

ஐ.... ஆயோ...இங்கே என்னிய வச்சிதான் காமடியேவா ? அதுதெரியாமத்தான் பின்னூட்டம் போட்டுவிட்டேனா ?

வடிவேலு ஸ்டையிலில் படிக்கவும்.
:)

பரிசல்காரன் said...

உங்க கொள்கைப் படி.. வந்துட்டேன்.. நீங்க எப்ப வரீங்க?

சேவியர் said...

அசத்திப்புட்டீங்க....

nagoreismail said...

விஜய் டிவியின் "தமிழ் பேச்சு எங்கள் மூச்சு" பார்த்தீர்களா? உங்கள் கருத்து என்ன? -

மலச்சிக்கலுக்கு வாழைப்பழம் சாப்பிடுங்கள்

ஜெகதீசன் said...

//
ஆசிப் மீரான் said...
கோவி அண்ணாத்தே,

நல்ல வாழைப்பழம் சாப்பிடுங்க
ஆனா பழம் மட்டும் சாபிட்டுடுங்க.

அதை விட்டுட்டு தோலுரிச்சு தரட்டுமான்னு கடைக்காரன் கேட்டான். சரின்னு சொன்னேன். அப்புறம் தோலுரிச்சு தந்ததுக்கு தனியா காசு கேட்டான். கடைக்கு முன்னால நின்னதுக்கு வாடகை கேட்டான். மொத்தமா 100 வெள்ளி செலவாச்சுன்னு பதிவு மட்டும் போட்டுடாதீங்க :-)

//
அண்ணாச்சி...இது சூப்பர்.... :))

ஆனா அண்ணன் 100 வெள்ளி அளவுக்கு சின்ன தொகைக்கெல்லாம் பழம் வாங்கமாட்டார்.. குறைந்தது 1000 வெள்ளி ஆகுற கடைக்குப் போய் தான் பழம் வாங்குவார்... :P

சென்ஷி said...

:))

நான் என்னத்த சொல்ல... இதுக்கு என்ன பதில் வருதுன்னு பார்த்துட்டு அதுக்கப்புறம் நான் கமெண்டுறேன். :)

சென்ஷி said...

//பாலபாரதி தன் பதிவில் பாபா தனது கூட்டத்துடன் தனியாவர்த்தனம் செய்வது குறித்து வருத்தப்பட்டிருந்தார். சென்னை பதிவர் சந்திப்பில் சென்னையிலேயே இருக்கும் சில (அறிவுஜீவிகளாக தங்களை பாவித்துக் கொள்ளும்) சென்னைப்பதிவர்கள் எல்லாம் எப்போதும் கலந்து கொள்ளாமல் இருப்பதன் மர்மம் என்ன? (அப்பாடா!! நம்ம வேலை முடிஞ்சது :-)//


:)))

மங்களூர் சிவா said...

/
இந்தத் தலைப்பையே பாருங்கள். 'மலச்சிக்கலைப் பத்தி நமக்கென்ன கவலை?'ன்னு மூக்கைப் பொத்திக்கிட்டு போகாம படிச்சுக்கிட்டு இருக்கீங்களே?
/

இந்த 'நாத்'தத்தில் தள்ளிவிட்டவர் பெனாத்தலார்
:((

தஞ்சாவூரான் said...

//சிவாஜியில் அமெரிக்க என்.ஆர்.ஐக்களை எல்லாம் கூமுட்டைகளாகக் காட்டினார்கள்.//

அண்ணாச்சி நீங்க வேற, எத்தனை கோடி எடுத்துட்டு வந்தேன்னு கேக்குற லூசுப்பய இந்தியாவிலேயே எத்தன பேரு இருக்காய்ங்க? நமக்குத் தெரிஞ்சதெல்லாம் நாலு கோடிதான், இப்ப தெருகோடி ஒண்ணு அதிகமா தெரிஞ்சுருக்கு :)

//லூசுப்பசங்க இருக்கானூங்க அமெரிக்காவுல? அட தேவுடா!!//

எனக்குத் தெரிஞ்சவரை, மொத்த அமெரிக்காவுலயும் ஒரு லூசுப் பயதான் இருக்கான் :)

// இருந்தாலும் 'சிவாஜி' 'குருவி'ன்னு தமிழ்ப்படத்தை உலகத்தரத்துக்கு எடுத்துட்டுப் போற எந்த முயற்சியும் செய்யாத ஒரே காரணத்துக்காகவே படம் நல்லா இருந்ததுன்னு சொல்லலாம்.//

வழிமொழிகிறேன் ...

மிதக்கும்வெளி said...

/ ஏற்கெனவே எளக்கியவாதியா ஆனவன், ஆகிக்கிட்டிருக்குறவன், ஆக முயற்சி செய்பவன் எவனும் படிச்சவன் தேர்தல்ல வாக்களிக்கப் போகாத மாதிரி பின்னூட்டம் போட வரவே மாட்டான்/

((((((((-

LinkWithin

Blog Widget by LinkWithin