25 April 2008

தசாவதாரம் - இசை வெளியீடு - என் பார்வையில்

** நான்கரை மணிக்கு இருக்கையில் இருக்கும்படி அறிவுறுத்தியது எனக்கு கவிஞர் யுகபாரதி தந்த பிரமுகர்களுக்கான நுழைவுச்சீட்டு. நான்கரை மணிக்குத்தான் வீட்டை விட்டே புறப்ப்ட்டு 5:00 மணிக்கு அரங்கின் உளநுழையும்போதுதான் முக்கியமானவர்கள் நுழையத் துவங்கியிருந்தார்கள்.

** அரங்கின் உள்ளே நுழைவதற்குள் ஏகப்பட்ட கெடுபிடி. இரண்டு நுழைவாயில்களில் உடல் முழுவதும் வருடிய பின்னரே நுழைய அனுமதித்தார்கள்

** நுழைந்த பின்னர் இருக்கை இல்லாமல் பலரும் அவதிப்பட்டுக் கொண்டிருக்க பெரும்பாலான் இருக்கைகளில் 'கமலின் விருந்தினர்' என்ற அடையாளத்தோடு சில நாற்காலிகள் நிரப்பப்படாமல் இருந்தும் அமர முற்ப்டாமல் ஓரமாகச் சென்றமர்ந்தேன்.

** ஐந்து மணிக்கு விழா துவங்குமென்று அறிவிக்கப்பட்டிருந்தும் விழா துவங்கியதென்னவோ 5:50க்குத்தான்

** அரங்கின் பின்புலமாக அழகான 'டிஜிட்டல் பேனர்' கலைச்சுவையோடு அமைக்கப்ப்ட்டிருக்க இரண்டு பெரிய திரைகளில் கமல் ரவிக்குமார் இணைந்து உருவாக்கிய அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்ச தந்திரம் திரைப்படங்களிலிருந்து பாடல்கள் மற்றும் சில காட்சிகள் திரையிட்டுக் கொண்டிருந்தார்கள்

** மேடையில் இருந்த திரையொன்றில் லேசர் மூலம் நிகழ்ச்சியின் கலந்து கொள்பவர்களின் (meeting of the legends என்றுதான் விளம்பரங்களில் சொல்லியிருந்தார்கள்) முகங்களையும் பெயர்களையும் வரைகலையாகக் காட்டி அசத்தினார்கள். கமலின் படம் வந்தபோது எழுந்த ஆர்ப்பாட்ட ஒலி இதுவரை நான் கேட்டிராதது. (இதுவே இப்படியென்றால் ரஜனிக்கு எப்படியிருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது)

** விழாவை தொகுத்து வழங்கினார் ஷோபனா. வயதாக ஆக இளமையாக இருப்பதெப்படி என்பதை அவரிடம் கேட்டு நம் பெண் பதிவர்களுக்குச் சொல்லலாமெனத் தோன்றிய எண்ணத்தை அதோடு மறந்து விட்டேன்

** அவர் ஒவ்வொருவராக அழைக்க தயாரிப்பாளர் ஸ்ரீதர், சோனி நிறுவனத்தின் நிர்வாகி ஸ்ரீதர்,
(முதன்முறையாக தெற்கில் இந்நிறுவனம் வெளியிடும் முதல் இசைத்தகடு இதுதானாம்),ஹேமமாலினி, ஜெயப்பிரதா (உங்களுக்கெல்லாம் வயசே ஆகாதா?), பிசின் போல பச்சென்று ஒட்டிக்கொள்ளும் அழகுடன் அசின், விஜய், மம்முட்டி, அமிதாப் பச்சன்என்று ஒவ்வொருவராக வர ஜாக்கிசான் மட்டும் மல்லிகா ஷெராவத்துடன் கைகோர்த்தவாறேபெரும் ஆரவாரத்துக்கிடையில் அரங்கில் நுழைந்தார். இறுதியாகக் கமல் கைத்தாங்கலாக கலைஞரை அழைத்துக்கொண்டு உள்நுழைய அரங்கம் ஆர்ப்பரித்தது மீண்டும்


** கலைஞரின் நல்ல நேரமோ கெட்ட நேரமோ விழா மேடையில் முன்பு ஸ்ரேயா அரைகுறையாக வந்தார் என்று சர்ச்சை எழுந்தது. இம்முறை மல்லிகா ஷெராவத் அவசரத்தில் ஏதோ கால்சட்டை அணிந்து வந்திருந்தார். நல்ல அழகான கால்கள் அந்த அம்மணிக்கு.

** ரவிகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார். வழக்கம்போல கமலை 'ஆஹா ஓஹோ'என்று புகழ்ந்து தள்ளிவிட்டு மீதியை வைரமுத்துவின் வரிகளில் பாராட்டுவதாகச் சொல்லி படத்தில் வைரமுத்து எழுதிய பாடல் ஒன்றை வாசித்தார் "உலகநாயகனே, இனி ஐநா உன்னை திரும்பிப் பார்க்கும்" என்று சொல்லி முடித்தார். (வைரமுத்து இப்படி பெரும்நடிகர்களுக்கு முதுகைப் பிறாண்டி பிறாண்டியே பெரிய ஆளாகிவிடுவார் போலிருக்கிறது.அவர்களுக்கும் அது வேண்டியிருக்கிறதென்பது இன்னொரு சோகம்)

** 'பெரிய ஆட்கள் இருக்கும் மேடையில் தான் ஒரு சிறு குருவி" என்று தொடங்கினார் விஜய். இயல்பான நடிப்பை மம்மூட்டியிடம் கற்றுக் கொண்டதாக அவர் சொன்னபோது சிரிப்பை அடக்கப் பெரும்பாடு ப்ட வேண்டியிருந்தது

** "வழக்கமா ஒரு போலிஸ்காரரா நடிக்கணும்னா நாங்க எல்லாம் ஏதாவது போலிஸ்காரங்களைப் பார்த்து அவங்க க்கிட்டயிருந்து கத்துக்குவோம். ஆனா கமல் போலிஸ்காரரா நடிச்சா போலிஸ்காரங்க அதைப் பார்த்து போலிஸ்காரங்க எப்படி இருக்கணும்னு கத்துக்குவாங்க. அதுதான் கமலுக்கும் எங்களுக்கும் இருக்குற வித்தியாசம்.
என்னதான் புத்திசாலி மாணவனா இருந்தாலும் வாத்தியாருக்கு வாழ்த்துச் சொல்ல முடியாது.
அதனால நான் கம்ல் சாரை வாழ்த்த மாட்டேன்" இதுவும் விஜய் பேசியதன் ஒரு பகுதி. கமல் வாத்தியாரு சரி.ஆனா சந்தடி சாக்குல தன்னை புத்திசாலி மாணவன்னு சொல்லிக்கிட்டாரு பாருங்க.. பிழைக்கச் தெரிஞ்சவர்தான்.

** இது பேசும்படம் அல்ல. பேசப்பட வேண்டிய பாம்" என்று சுருக்கமான தமிழில் பேசினார் மம்மூட்டி

** ஹேமமாலினி வணக்கம் சொல்லிவிட்டு ஆங்கிலத்தில் கமலை வாழ்த்தினார். ஜெயப்பிரதாவும் அதே. அஸின் தமிழில் இந்தப் படத்தில் தானிருப்பதே பெரிய விசய்மென்று எல்லா நாயகிகளும் வழக்கமாகப் பாடும் அதே பல்லவியைப் பாடினார்.( எந்த விழாவுலயாவது பல்லவியை மாத்திப் பாடச் சொல்லுங்கப்பா) இராம நாராயணன்

** பச்சன் தனது கணீர் குரலில் தனது முதல் படத்திற்கு விருது கிடைத்தபோது சென்னையில் இருந்ததையும் அந்த விருதை வழங்கியவரே கலைஞர்தான் என்பதையும் நினைவுகூர்ந்தார். கமலின் சிறப்புகளை எடுத்துச் சொல்லி விட்டு சுருக்கமாக முடித்துக் கொண்டார்

** ஜாக்கி சான் அழைக்கப்ப்ட்டபோது மிக உற்சாகமான வரவேற்பு. உண்மையில் மேடையில் யாரேனும் பேசும்போது மற்றவர்கள் அமைதியாக இருக்க ஜாக்கிசான் மட்டும் சிரித்த முகத்துடன் அவ்வப்போது ரசிகர்களோடு சேர்ந்து கைதட்டடிக் கொண்டு உற்சாகமாக இருந்தார்

** வணக்கம் சொல்லி துவங்கியதும் அரங்கம் அதிர்ந்தது. என்னதான் இருந்தாலும் பச்சன் தான் சூப்பர் ஸ்டார். அவரைப் போல இருக்க விரும்புவதாகக் குறிப்பிட்ட்வர் கரினாதி என்று முதல்வரை அழைக்க கலைஞருக்கே அடக்க முடியாத சிரிப்பு

** பெரிய பந்தாவெல்லாம் இல்லாமல் எனக்கு தமிழ் தெரியாது அதனால உச்சரிப்பு எபடின்னு தெரியலை என்று சொல்லிவிட்டு எனக்கு இந்த தயாரிப்பாளரை பல வருடங்களாகத் தெரியும். என்னை அவர் கூப்பிட்டுதான் வந்த்ரிஉக்கேன். அதனால அவருக்கு நன்றி. என்று சொல்லிவிட்டு ரவிச்சந்திரனை சுருக்கி ரவி என்று சொல்வதற்குள் அவர் திணற அரங்கில் சிரிப்பொலி.

** "10 நிமிடம் படம் போட்டு காட்டினார்கள். பார்த்து ரசித்தேன் என்ன சொல்வது? வாவ். வாவ். வாவ்" என்று அவர் வியக்கவும் அரங்கம் அதிர்ந்தது. 'நான் உங்களோடு சேர்ந்து ஒரு ப்டம் செய்யலாம்'னு நினைக்கிறேன் என்று அவர் சொன்னதும் மீண்டும் ஆர்ப்பரிப்பு எழுந்தடங்கியது அரங்கில்

** கமல் தன் பேச்சை இம்முறை எழுதி வைத்திர்ந்ததால் நவீன இலக்கியவாதிகளைப் போல வார்த்தைகளைத் தேடிப் பேசி அவஸ்தைப்படுத்தாமல் இயல்பாகப் பேசினார். இந்தியாவில் சிறந்த கலைஞர்களை வரவழைப்பதென்ற எண்னம் எழுந்ததும் பச்சனைத்தான் தாம் தேர்ந்தெடுத்ததாகவும் சிவாஜி இருந்திருந்தால் அவரைத்தான் அழைத்திருப்பேன் என்றும் சொல்லி தன் சிவாஜி பாசத்தை மீண்டும் வெளிப்படுத்தினார், இரண்டு ஆண்டு கால உழைப்பு நன்றாக வந்திருப்பதாகவும் இனி பட தொடர்பான தகவல்கள் பத்திரிகைகளுக்கு வருமென்றும் சொன்னார்

** கலைஞர் பேசுகையில் படத்தின் ஆரம்பக் காட்சிகளைப் பார்த்துவிட்டு கமலை அப்படியே முத்தமிட்டதாகவும் நல்லவேளையாக அப்போது கமலுக்கு தாடி இல்லையென்றும் கூற அரங்கில் சிரிப்பலை எழுந்தது. இதுவரை பத்திரிகையாளர்களுக்கு படத்தைப் போட்டுக்காட்டவில்லை என்று அவர் சொன்னார் நான் ஒரு பத்திரிகையாளன் என்பதை அவர் மறந்து விட்டார் என்று சொல்ல இம்முறை கமலே அதிர்ந்து சிரிப்பதைப் பார்க்க முடிந்தது

** கமலுக்கும் ஜாக்கி சானுக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா? இருவரும் 1954இல் பிறந்தவர்கள். ( க்மலுக்கு 54 வய்தாகிவிட்டதா?!! ) கமல் 7/11 இல் பிறந்தவர் ஜாக்கிசான் 7/4 இல் பிறந்தவர். இருவரும் ஏழாம் தேதியில் பிறந்தவர்கள் இருவருக்கும் ஏழுமாதம் வித்தியாசம்" என்று ஏதோ எண் ஜோசியர் மாதிரி பேசிக் கொண்டிருந்தார் முதல்வர். புள்ளி விவரங்களை எப்படி விரல் நுனியில் வைத்திருக்கிறார் பார்த்தாயா என்று வியப்பவர்களூம் இருந்திருப்பார்கள் போல. அதற்கும் கைதட்டல்தான்

** "பிரம்மாண்டம் என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்று நான் கேட்டறிதிருக்கிறேன். சிலருக்கு எத்ற்கெடுத்தாலும் பிரம்மாண்டம்தான். ஆகவே இந்தப் பிரம்மாண்டம் என்ற சொல்லைக் கேட்டாலே என்க்கு சலிப்பாக இருந்தது. ஆனால் கமல் படத்தில் எனக்குக் காட்டிய ஆரம்பக் காட்சிகளைப் பார்த்தபின் நிச்சயம் சொல்வேன் பிரம்மாண்டம் என்றால் இதுதானென்று" என்று கலைஞர் உள்குத்தோடும் பேசத் தவறவில்லை.

** கமல் பேசி முடித்து கலைஞர் துவங்கியதும் சிலர் எழுந்து போகத் துவங்கினார்கள். ஆனால் கூட்டம் கலைவது தெரிந்ததும் வாசலை இழுத்துப் பூட்டி விட்டார்கள் காவலர்கள். நிகழ்ச்சி முடிந்து ஓரிரு நிமிடங்களுக்குப் பின்னரே வாயில் திறக்கப்பட்டது. (இதுல எல்லாம் காவல்துறை ரொம்பத் தெளிவா இருக்காங்க :-)

** நிகழ்ச்சி துவங்குமுன் படத்திலிருந்து சில காட்சிகளைக் காட்டினார்கள். உண்மையில் தரணி, ரவிவர்மன் இணைந்து மிரட்டியிருக்கிறார்கள். கோபுரத்தின் மேலேறும் கேமரா அபப்டியே கோபுரக் கலசம் தாண்டி கீழிறங்கி நகர்ந்து சென்று மேலேறி யானையின் மீதேறுகிறது. அசத்தலான மிரட்டலான காட்சியாக இருந்தது அது. தொழிநுட்பத்தில் இந்தப் படம் நிச்சயம் பேசப்படுமென்றுதான் தோன்றுகிறது

** ஹிமேஷ் படத்தின் இசையமைப்பாளராம். விமானத்தை கோட்டை விட்டதால் அவர் விழாவுக்கு வரவில்லை. படத்தின் பின்னணி இசையை தேவி ஸ்ரீபிரசாத் செய்திருக்கிறார் மலையாளத்தில் இது வழக்கமென்றாலும் தமிழில் இது கொஞ்சம் புதுசுதான்

** "வழக்கம் போல வைரமுத்து மூன்று முத்தான பாடல்களை நான் எழுதியிருக்கிறேன் இரண்டு வைரமான பாடல்களை வாலி எழுதியிருக்கிரார். ஆக இந்தப் பாடல்கள் எல்லாம் வைரமும் முத்துவுமாக ஜொலிக்கின்றன" என்றார் ஜெயமோகன் ஸ்டைலில்.

** எல்லாம் சரிதான். வைரமுத்து ஒரு பாடல் எழுதியிருக்கிறாராம்
"செப்டம்பர் ஒன்பதில் சரிந்தது ட்வின் டவர்
எப்போதும் சரியாதது என் டவர்" என்று மல்லிகா ஷெராவத்துக்காகப் பாடல் எழுதியிருக்கிறாராம். அப்படின்னா என்னன்னு யாராவது எனக்கு சொல்லுங்கப்பா.

27 comments:

கானகம் said...

நல்லாதான் எழுதி இருக்கீங்க.. கடைசியில கேட்டிருக்குற சந்தேகமே எனக்குப் புரியல..யாராவது பதில்சொல்வாங்க.. பாப்போம்...

முகமூடி said...

// "செப்டம்பர் ஒன்பதில் சரிந்தது ட்வின் டவர்
எப்போதும் சரியாதது என் டவர்" என்று மல்லிகா ஷெராவத்துக்காகப் பாடல் எழுதியிருக்கிறாராம். அப்படின்னா என்னன்னு யாராவது எனக்கு சொல்லுங்கப்பா. //

அது செப்டம்பர் பதினொன்னு. பாட்டு தப்பா, இல்ல கேட்டது தப்பா?

மத்தபடி மல்லிகா ஷெராவத்துன்னா யாரு? தம்பி மோகன்தாஸிடம் கேட்டு வாங்கி ஒரு படம் போடவும்.

கிரி said...

//விழாவை தொகுத்து வழங்கினார் ஷோபனா. வயதாக ஆக இளமையாக இருப்பதெப்படி என்பதை அவரிடம் கேட்டு /

எனக்கும் ரொம்ப நாளா சந்தேகம் ;)

//சந்தடி சாக்குல தன்னை புத்திசாலி மாணவன்னு சொல்லிக்கிட்டாரு பாருங்க.. பிழைக்கச் தெரிஞ்சவர்தான்//

ஹா ஹா ஹா

//கமல் தன் பேச்சை இம்முறை எழுதி வைத்திர்ந்ததால் நவீன இலக்கியவாதிகளைப் போல வார்த்தைகளைத் தேடிப் பேசி அவஸ்தைப்படுத்தாமல் இயல்பாகப் பேசினார்//

ரஜினி சாத்வீகம் போலவா ;)

//பிரம்மாண்டம் என்ற சொல்லைக் கேட்டாலே என்க்கு சலிப்பாக இருந்தது//

சொல்வது ரஜினியையா ஷங்கரையா ..விளக்குங்கப்பா

//செப்டம்பர் ஒன்பதில் சரிந்தது ட்வின் டவர்
எப்போதும் சரியாதது என் டவர்" என்று மல்லிகா ஷெராவத்துக்காகப் பாடல் எழுதியிருக்கிறாராம். அப்படின்னா என்னன்னு யாராவது எனக்கு சொல்லுங்கப்பா//

படத்தில் இந்த வரியை பாடியது யாருன்னு சொல்லுங்க ஹீ ஹீ ஹி

அதெல்லாம் சரி விழாவுக்கு 10 கோடி செலவுன்னு சொல்றாங்களே ..புருடா தானே.. நான் கூட விழாவுக்கு இலவசம் (அழைப்பிதழ்கள் மட்டும்) என்று நினைத்தேன்... கில்லாடி ரவியா இருக்காரே

ILA said...

:)

சின்ன அம்மிணி said...

\\இயல்பான நடிப்பை மம்மூட்டியிடம் கற்றுக் கொண்டதாக அவர் \\ என்ன கொடுமை இது சாரே!!! எங்க போய் முட்டிக்க

Anonymous said...

//செப்டம்பர் ஒன்பதில் சரிந்தது ட்வின் டவர் // என்ன கொடுமை இது ஆசிப்? ட்வின் டவர் சரிந்தது செப்டம்பர் 11 சாமி.

ஹரன்பிரசன்னா said...

//** ஹிமேஷ் படத்தின் இசையமைப்பாளராம். விமானத்தை கோட்டை விட்டதால் அவர் விழாவுக்கு வரவில்லை. படத்தின் பின்னணி இசையை தேவி ஸ்ரீபிரசாத் செய்திருக்கிறார் மலையாளத்தில் இது வழக்கமென்றாலும் தமிழில் இது கொஞ்சம் புதுசுதான்
//

தமிழிலும் பழசுதான். எத்தனையோ படங்கள் இப்படி வந்திருக்கின்றன.

//இயல்பான நடிப்பை மம்முட்டியிடம் கற்றுக் கொண்டதாக அவர் சொன்னபோது//

மம்முட்டியை ஏன் விஜய் இப்படி திட்டித்தீர்த்தார் எனத் தெரியவில்லை. :))

வந்தியத்தேவன் said...

அண்ணாச்சி கலக்கல் பதிவு. கலைஞர் டிவி நாளை ஒளிபரப்பாக்கவிருக்கின்ற ஒளிபரப்பை முதலில் பார்த்த அனுபவம். அப்படியே மல்லிகா அசின் போட்டோக்களையும் போட்டிருந்தால் இன்னும் மெருகு கூடியிருக்கும்.

ஆசிப் மீரான் said...

கானகம் அண்ணாச்சி

என்னைத் தேடுனதுக்கு மொதல்ல நன்றி!! நான் என்னையும் மூணு பேரு தேடுனாங்கன்னு சொல்லியிருந்தேனே அதுல நீங்களும் உண்டு. ஏன்னா, நான் ஒண்ணுன்னு சொன்னா அது லட்சம் மாதிரி :-))
என்னது சந்தேகத்துக்கு விடை உங்களுக்கும் தெரியலியா?

முகமூடி

விழா முடிஞ்சு வெளீல நடந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை போக்குவரத்தைக் கடந்து வீடு வந்து சேர்ந்து பாதித் தூக்கத்திலேயே மக்கள் சேவைக்காக தட்டுன பதிவு அது.11/9 ல ஒனப்து தேதின்னு நெனச்சுக்கிட்டு தட்டிட்டேன்ன் போல. அதுவா முக்கியம். சரியாத டவர் எதுன்னு சொல்லுங்கப்பா.

நீரு மூடிக்கிட்டு திரியுதீரு. ஆனா மூடவே மூடாத ஒரு அம்மணியோட பேருதான் மல்லிகா. புரியுதா?

கிரி அண்ணாச்சி

//பிரம்மாண்டம் என்ற சொல்லைக் கேட்டாலே என்க்கு சலிப்பாக இருந்தது//

சொல்வது ரஜினியையா ஷங்கரையா ..விளக்குங்கப்பா

ரெண்டு பேரையும் சேர்த்துத்தான் :-)


//அதெல்லாம் சரி விழாவுக்கு 10 கோடி செலவுன்னு சொல்றாங்களே ..புருடா தானே.. //

ஒன்றிரண்டு கோடிகள் குறைவாக இருக்கலாம் ஜாக்கி சான் வகையறக்களுக்கே நிறைய கொடுத்ததாகப் பேச்சு

ஆசிப் மீரான் said...

இளா

எதுக்கு சிரிச்சீங்க? போன் அபதிவை நெனச்சு இந்தப் பதிவுல பின்ன்னூட்டமா? :-)

சின்ன அம்மணி

எல்லாம் சைக்கிள் இடைவெளில நானும் இயல்பா நடிக்கிறேன்னு சொல்லிக்குறதுக்குத்தான்

யோவ் அனானி

சரிஞ்ச டவரைப் பத்தி யாருக்குய்யா கவலை. தேதியா முக்கியம்? சரியாத டவரைப் பத்திப் பேசுங்கய்யான்னா தேதி சரியில்ல அது சரியில்லன்னுக்கிட்டு...

பிரசன்னா

பாவம்தான் மம்மூட்டி. அந்தப் பாவத்துக்குப் பரிகாரமாத்தான் கமல் "அற்புதமான் நடிகர் அவர். அவரோட தனியாவர்த்தனம் பார்த்துட்டு நான் அழுதிருக்கேன்' என்று மம்மூட்டியைப் பற்றிப் பேசி அவருக்கு ஆறுதல் சொன்னார் :-))

ஆசிப் மீரான் said...

வந்தியத் தேவன் அண்ணாச்சி

படம் போட்டிருக்கலாம். ஆனா நான் ஒரு அனுபவத்திற்காகத்தான் இந்த விழாவுக்குப் போனேன் என்பதால் கையில் நிழற்பட கருவி ஏதும் கொண்டு செல்லவில்லை

Anonymous said...

இரவு 2 மணிக்கு நட்டு புண்ணியத்துல நெட்ட தொறந்து வச்சிகிட்டு பார்த்தா விலாவாரியா உங்க பதிவு! படிக்க படிக்க நேர்ல பார்த்த மாதிரியே இருக்கு அண்ணாச்சி!

என்ன ஒரு கடமை என்ன ஒரு கடமை, பய புள்ளய்ங்க ஆசைய என்னமா தீர்த்து வச்சிருக்கீக!

ஆமா அது யாரு மல்லிகா, முகமூடிக்கு வந்த சந்தேகம் தான் நேக்கும்:-))

இப்படிக்கு
அபிஅப்பா

Sridhar Narayanan said...

விழாவை இன்னமும் பாக்கவில்லை. ஆனால் ஒலிநாடா வெளியீட்டுக்கு இவ்வளவு ஆடம்பரம் தேவையா என்று பார்த்தால் நுழைவுச்சீட்டு எல்லாம் போட்டிருந்தாங்க போல. நிறைய பேர் சீட்டு வச்சிருந்தும் இடம் இல்லாம திரும்பி போனாங்கன்னு படிச்சேன்.

இப்படிப்பட்ட மார்கெட்டிங் டெக்னிக்குகள் எதிர்மறை விளைவுகள் உண்டாக்கும் வாய்ப்புகள் அதிகம்.

படத்தை பத்தின் எதிர்பார்ப்புகள் கூடித்தான் இருக்கு. சிவாஜி மாதிரி பரவலாக வெளியிட்டால் தப்பித்தார்கள் என்று தோன்றுகிறது :-)

ஹரிஹரனும் சாதனா சர்கமும் அருமையாக பாடியிருக்கிறார்கள். கமல் கிழவி குரலில் ஒரு பாடல் முயற்சித்திருக்கிறார். வழக்கம் போல் உச்சஸ்தாயில் அவரும் ஹிமேஷ் ரேஷமையாவும் ஒரே பாடலை தனித்தனியாக பாடியிருக்கிறார்கள். பாடல்கள் ஏமாற்றம் அளிக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது.

சரியாத டவரை பத்தி ஜாக்கியிடம் கேட்டிருக்கலாம். Myth படத்தில் அவர்தான் மல்லிகாவின் ............ அதாவது...... மானத்தை காப்பாற்றுவார். :-))

koothanalluran said...

//வைரமுத்து எழுதிய பாடல் ஒன்றை வாசித்தார் "உலகநாயகனே, இனி ஐநா உன்னை திரும்பிப் பார்க்கும்" //

வைரமுத்து எப்போது தன் இலக்கியத் திருட்டை நிறுத்துவார். குறிப்பிட்ட வரிகள் திண்டுக்கல் ஹுசைன் மன்பயீ என்பவர் நபிகள் நாயகத்தை புகழ்ந்த் பாடியது இது குறுந்தகடாகவும் வெளி வந்துள்ளது.

ஆசிப் மீரான் said...

அபி அப்பா

உங்களுக்காக படம் போட்டிருக்கேன். ஏற்கெனவெ பார்த்த அம்மணிதானேன்னு கவலைப்படாதீங்க

//ஒலிநாடா வெளியீட்டுக்கு இவ்வளவு ஆடம்பரம் தேவையா என்று பார்த்தால் நுழைவுச்சீட்டு எல்லாம் போட்டிருந்தாங்க போல//

நுழைவுச்சீட்டு விவகாரம் தெரியலை. ஆனால் விஐபி சீட்டு வச்சிருந்தவங்களே இடம் இல்லாம அல்லாடிக்கிட்டு இருந்தாங்க

இதே கேள்விதான் கமலுக்கும் இருந்ததாம்.ஜூவி இந்த இதழில் முகப்பு கட்டுரை இட்டிருக்கிறது

கூத்தாநல்லூராரே,

'இருபத்தோராம் நூற்றாண்டுக்கும் எம்பெருமானே தலைவர்' பாடலைச் சொல்லுறீங்களாக்கும். இதெல்லாம் ஜகஜமப்பா. ஐநா திரும்பிப் ப்பார்த்தா மட்டும் என்னவாயிடப் போவுதாம்? அதுவே ஒரு பொம்மை அமைப்பு.

முரளிகண்ணன் said...

அண்ணாச்சி இதிலயும் ஜெயமோகனா?

அபி அப்பா said...

ஆஹா அண்ணாச்சி! பொண்ணு வெளக்கி வச்ச குத்து வெளக்காட்டமான்னா இருக்கா!:-))

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//ஆனா மூடவே மூடாத ஒரு அம்மணியோட பேருதான் மல்லிகா. புரியுதா..?//

அண்ணாச்சி எனக்கென்னவோ சேரக்கூடாத சேக்காளி பயலுகளோட சேர்ந்து சகவாசம் கெட்டுப் போயி திரியறீகளோன்னு பயமா இருக்கு..

இப்படியெல்லாமா பேசுவீரு..? இப்படியெல்லாமா எழுதுவீரு..?

அது ஆரு அண்ணாச்சி அபிஅப்பான்னு ஒருத்தரு..?

நட்ட நடுராத்திரி 2 மணிக்கு நெட்டை நோண்டுனது பத்தாதுன்னு மொத்தம் இருக்குற 50 வரில 15 பேர் போட்டு.. அதுல 4 பொம்பளைங்கள பேர் போட்டு.. அதுல ஒரு பொம்பளை பேரை மட்டும் கரீக்ட்டா ரவுண்டு கட்டி கேக்குறது..?

தீபாவெங்கட்டுக்கு போன் அடிக்கவான்னு கேளு அண்ணாச்சி..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//அபி அப்பா said...
ஆஹா அண்ணாச்சி! பொண்ணு வெளக்கி வச்ச குத்து வெளக்காட்டமான்னா இருக்கா!:-))//

யாருங்கப்பா அங்க.. அபிஅம்மாவுக்கு போனை போடுங்கப்பா..

இனிமே எந்த கொமெண்ட்டா இருந்தாலும் பர்மிஷன் வாங்கிட்டுத்தான் போடணும்னு சொல்லச் சொல்லுங்கப்பா..

யாரு, யார் ஜொள்ளு விடறதுன்னு விவஸ்தையே இல்லாம போச்சு நாட்டுல..

லக்கிலுக் said...

//சோனி நிறுவனத்தின் நிர்வாகி ஸ்ரீதர்,
(முதன்முறையாக தெற்கில் இந்நிறுவனம் வெளியிடும் முதல் இசைத்தகடு இதுதானாம்),//

சோனி நிறுவனம் இதற்கு முன்பாக பாய்ஸ் திரைப்படத்தின் பாடல்களை வெளியிட்டது :-)

Thamizhmaangani said...

//ஆனா சந்தடி சாக்குல தன்னை புத்திசாலி மாணவன்னு சொல்லிக்கிட்டாரு பாருங்க.. பிழைக்கச் தெரிஞ்சவர்தான்//

haahaa.. naanga student no 1 thaan!

ஸ்ரீ said...

(இதுவே இப்படியென்றால் ரஜனிக்கு எப்படியிருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது)

இதற்கு என்ன அர்த்தம் கொஞ்சம் விளக்கவும்.

ஆசிப் மீரான் said...

தமிழ் மாங்கனி

நீங்க நம்பர் 1 ஆவே இருங்க. :-)

ஸ்ரீ

கமலுக்கே இவ்வளவு ஆர்ப்பரிப்பு என்றால் ரஜனிக்கு இதை விட அதிகமாக இருக்குமென்பதை உணர முடிந்தது. அதைத்தான் சொல்லியிருக்கிறேன்

ஸ்ரீ said...

நண்பரே அதென்ன கமலுக்'கே' என்கிற வார்த்தை. நம்பர் 1 என்பதை நான் சொல்லவில்லையே. இருவரும் அவர் அவர் வழிகளில் சிறந்தவர். உங்களுக்கு விமர்சிக்கும் உரிமை இருக்கின்றதா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒப்பிட்டிருக்கக்கூடாது அண்ணாச்சி. அடைப்புக்குள் இருப்பதை நீக்கினால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. No offense meant.

ஜோ / Joe said...

//கமலுக்கே இவ்வளவு ஆர்ப்பரிப்பு என்றால் ரஜனிக்கு இதை விட அதிகமாக இருக்குமென்பதை உணர முடிந்தது. //

பாதிக்கு மேல் கமல் ரசிகர்கள் போலீஸ் அனுமதியில்லாமல் வெளியே நிற்க ,குழந்தை குட்டிகளோடு குடும்பத்தோடு வந்தவர்கள் ,பிரபலங்களின் மூலம் பாஸ் வாங்கி வந்த உங்களைப் போன்றோரே பாதிக்கு மேல் இருக்கும் போதே இவ்வளவு ஆர்ப்பரிப்பு என்றால் ,முழுசும் கமல் ரசிகர்களாக இருந்தால் யோசித்து பாருங்கள் .

கமல் பட விழாவுக்கு கமலுக்கு தான் அதிகம் கை தட்டல் கிடைக்கும் ,ரஜினி வந்தாலும்.

ஆசிப் மீரான் said...

ஸ்ரீ

கமலின் ரசிகர்களை விட ரஜனி ரசிகர்களுக்கு சக்தி அதிகம். கமல் ரசிகர்களில் பாதிக்கு மேல் விசில் அடிக்கப் பிடிக்காத மேட்டிமை மக்கள்தான். ரஜனி ரசிகர்கள் நிலையோ தலைகீழ் அதனால்தான் அப்படிச் சொன்னேன்

ஜோ

ரஜனி வந்தாலும் கமலுக்குத்தான் கைதட்டல் கிடைக்கும் என்பதில் எனக்கும் மாற்ருக்கருத்து இல்லை. ஆனால் சந்த்டிச்சாக்குல 'உஓவ் ஓசி கிராக்கி'ன்னு சொல்லாம சொல்லிட்டீகளே? :-)

வால்பையன் said...

ஏன் அப்பு மல்லிகா படம் மட்டுமிருக்கே!
அசின், பிசின் படம் கிடைக்கலையா?

வால்பையன்

LinkWithin

Blog Widget by LinkWithin