02 June 2008

உருப்படியா எழுதுங்கடே!

எனது 300வது பதிவை முன்னிட்டு எனக்கு ஒரு வாசிப்புரை வழங்க வேண்டுமென்று ஹரன் பிரசன்னா அவர்களிடம் கேட்டிருந்தேன் - ஏன்னா அவர்தான் 'உமக்கெல்லாம் இது வேறயாவே?" என்று உடனே மறுக்கக் கூடியவர் என்று தெரிந்திருந்ததால். நினைத்தபடியே, "30 பதிவு விடும்வே. 30 வார்த்தையாவது ஒழுங்கா எழுதியிருக்கீராவே நீரு? இதுல வாழ்த்துரை வேணுமாம்லே. போய் தொலையும்வே!" என்று 'ஆசியுரை' எழுதி அனுப்பி விட்டார். பாருங்க, அப்படி எழுதியும் அவர் இவர் என்று அவருக்கு நான் வழங்கும் மரியாதையை. அதுதான் எனக்கும் அவருக்கும் இருக்கும் வித்தியாசம்.

இப்போது நானூறாவது பதிவை நெருங்கும் வேளையில் இது நினைவுக்கு வந்ததால் குறைந்தது 40 வார்த்தையாவது உருபப்டியா இருக்கட்டுமேன்னு இரவல் வாங்கிப் போட்டிருக்கேன்.

வெற்றிக்கு உதவும் மூன்று வாக்கியங்கள்

அடுத்தவர்களை விட அதிகம் தெரிந்து கொள்ளுங்கள்
அடுத்தவர்களை விட அதிகம் உழையுங்கள்
அடுத்தவர்களிடம் எதிர்பார்ப்புகளைக் குறையுங்கள்


சேக்ஸ்பியர்

நீங்கள் வெற்றி பெற்றால் விளக்கம் சொல்ல அவசியமில்லை. நீங்கள் தோற்றுப் போனால் விளக்கமளிக்க நீங்கள் அங்கு இருக்க அவசியமில்லை

அடால்ஃப் ஹிட்லர்

உங்களை எப்போதும் அடுத்தவர்களுடன் ஒப்பிடாதீர்கள் அவ்வாறு செய்தால் உங்களை நீங்களே அவமானப்படுத்துகிறீர்கள

ஆலன் ஸ்ட்ரைக்


க்ண்ணில் காணும் மனிதர்களையே நம்மால் நேசிகக் முடியாவிட்டால் கண்ணில் காண முடியாத கடவுளை எப்படி நம்மால் நேசிக்க முடியும்?


அன்னை தெரசா

வெற்றி என்பது முதல்வனாக இருப்பதென்று பொருளல்ல.
முன்னர் செய்ததை இன்னமும் தெளிவாகச் செய்திருக்கிறோம் என்றுதான் பொருள்


போனி ப்ளேர்

நான் ஆயிரம் முறை தோற்றதாகக் கருத மாட்டேன்
தோல்விக்கு ஆயிரம் காரணங்கள் இருப்பதைக் கண்டுகொண்டதாகத்தான் நினைப்பேன்


தாமஸ் ஆல்வா எடிசன்

எல்லோரும் உலகை மாற்ற வேண்டுமென்றுதான் நினைக்கிறார்கள் தன்னை மாற்ற வேண்டுமென்று யாரும் முய்ற்சிப்பதில்லை

லியோ தால்ஸ்தாய்

எல்லாரையும் நம்புவது அபாயகரமானது
எவரையுமே நம்பாமல் இருப்பது அதை விட அபாயகரமானது


ஆப்ரஹாம் லிங்கன்

26 comments:

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

300ஆ!

சைடுல கணக்குப் பார்த்தா.., அதை விட கூட வருதே அண்ணாச்சி!

என்னமோ போங்க... வாழ்த்துக்கள்னு சொல்லி வச்சுக்கிறேன்.

jaseela said...

wazhthukkal annachi!!!melum melum niraya widupatta,widupdatha,punaivu matrum kavujaikalai ezhuthi 1000mawathu pathivai thoda wazhthukkal

ஆசிப் மீரான் said...

தலை

உமக்குக் கூட்டல் கணக்கெல்லம் வேற வருமா? சொல்லவே இல்ல :-))

பாக்சவை வாழ வைக்கணும்னு வேணும்னே இப்படி ஏதாவது ஏடாகூடமா செய்றீரா இல்ல நெசம்மாவே நீரு இப்படித்தானா? :-)

400வது பதிவை நெருங்கப் போறேன்னு சொல்லியிருந்தேனே? அத
கவனிக்காம அபி அப்பா மாதிரி பதிவை வாசிக்காமலேயே படிச்ச மாதிரி பின்னூட்டம் போட்டா இப்படித்தான் இருக்கும்.

லக்கிலுக் said...

வாழ்த்துக்கள்!

ஒரிஜினல் லக்கிலுக்

ஆசிப் மீரான் said...

வாங்க ஜெசிலா

வாழ்த்துகளுக்கு நன்றி! 400 போடுறதுக்குள்ளேயே நாக்கு தள்ளுது. 1000மா? இருந்தாலும் முயற்சி செஞ்சுடுவோம்

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

இதுலயாவது உருப்படியா எதுனாச்சும் எழுதியிருந்தா நானும் அதுக்கு வரிக்கு வரி பதில்ன்னுட்டு 50 கமெண்ட்டாவது போட்டிருப்பேன்..

கெடுத்துட்டீரு அண்ணாச்சி..

இருந்தாலும் கரீக்ட்டா 400-வது பதிவுலயாச்சும் எனக்கு எதுனாச்சும் 'வேலை' கொடுங்க.. ஜமாய்ச்சுடறேன்..

இலவசக்கொத்தனார் said...

400க்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்!!

குசும்பன் said...

//ஆசிப் மீரான் said...
தலை
400வது பதிவை நெருங்கப் போறேன்னு சொல்லியிருந்தேனே? அத
கவனிக்காம அபி அப்பா மாதிரி பதிவை வாசிக்காமலேயே படிச்ச மாதிரி பின்னூட்டம் போட்டா இப்படித்தான் இருக்கும்.//

ஹி ஹி ஹூ ஹூ ஹி ஹி
தலை தேவையா இது வேலை மெனக்கெட்டு விரல் விட்டு ஒன்னு ஒன்னா கூட்டி பார்த்ததுக்கு ...

லக்கிலுக் said...

உ.த. அண்ணா!

ஒவ்வொரு பதிவிலும் 50 கமெண்டு 60 கமெண்டு போடுறதுன்னு ஏதாவது வேண்டுதலா?

பைத்தியக்காரன் பதிவுலே வரிசையா நீங்க போட்ட நூறு கமெண்டுகளை பார்த்து தெறிச்சுட்டேன்.

இளவஞ்சி said...

அண்ணாச்சி,

400ஆ? ஜெமோவை சீண்டுன பதிவுகளையும் சேர்த்தா?! (அதுவே 500 வருமேயய்யா! :) )

எப்படியா இப்படி உம்மால மட்டும் முடியுது? கலக்கும்வே! மூத்த்த்த்த பதிவரான உம்மை வாழ்த்த வயதில்லை! வணங்கறோமுங்... :)

// அடுத்தவர்களிடம் எதிர்பார்ப்புகளைக் குறையுங்கள் // அதனால சீக்கிரமே கொஞ்சமா 1000 பதிவுக அடிக்க வாழ்த்துக்கள்! :)

முரளிகண்ணன் said...

\\போனி ப்ளேர்\\

டோனி பிளேரா? இல்லை இவர் வேறா?

பைத்தியக்காரன் said...

3 ஆயிரம், 30 ஆயிரம்... என்று எழுதி, கல்வெட்டில் பொறிக்க வாழ்த்துகள் அண்ணாச்சி!!

தோழமையுடன்
பைத்தியக்காரன்

மாயவரத்தான்... said...

400 - Not out-‍ஆ.. சூப்பரு!

ஆசிப் மீரான் said...

லக்கி அண்ணாத்தே

நீரு என்னத்த எழுதுனாலும் சூடா இருக்கே?எப்படிய்யா அது? :-)வாழ்த்துகளுக்கு நன்றி!!

உத அண்ணாச்சி

50 பின்னூட்டமா? யப்பா. ஆளை விடுமய்யா. 400வதை பதிவை உம்ம வச்சே எழுதச் சொல்லலாம்னு இருக்கேன். அதுவே இன்னொரு 400 பதிவு நீளத்துக்கு எழுத மாட்டீரா என்ன? :-)

ஆசிப் மீரான் said...

வாங்க கொத்ஸ்

400 க்குமறக்காம் அவந்து மீதியையும் சொல்லிடணூம் இப்பவே சொல்லிப்புட்டேன்.

குசும்பா,

தலைக்குக் கூட்டல் அந்த காலத்துலேருந்தே தகராறாம். பாவம் அவரு என்ன செய்வாரு?

ஆசிப் மீரான் said...

வாருமய்யா இளவஞ்சி

நன்றி!! ஜெமோ நம்ம கொலதெய்வம் மாதிரி. பதிவெழுதுறதுக்கான சக்தியும் செய்தியும் அவருதான் எப்பவும் அருளுறார். அவருக்குத் தனியா நன்றி பதிவுன்னு ஒரு நானூறு போட்டுடலாம் :-)

மூத்த்த்தன்னு இழுத்தா எப்படிங்காணும்? ஆரம்ப காலத்துலேருந்தே எழுதுறதாலதானே அப்படி சொன்னீர். அடுத்த ஜனவரிலதான் அடியேனுக்கு 29 என்பதை மீண்டும் நினைவுபடுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். :-)

ஆசிப் மீரான் said...

முரளி

டோனி ப்ளேரு இதெல்லாம் எந்தக் காலத்துல சொல்வர்ரு? அவருக்குத் தெரிஞ்சதெல்லாம் புஷ் அண்ணாச்சி சொல்ரதுக்கெல்லாம் 'ஆமாம்' போடுறது மட்டும்தான்.

போனி ப்ளேரு பேரைக் கெடுத்துட்வீங்க போல ;-)

பைத்தியக்கார அண்ணாச்சி

மக்களெல்லாம் பைத்தியம் புடிச்சு அலையணுகறதுல ரொம்பத் தெளிவா இருக்கீங்க போல. மூவாயிரத்துக்கே லக்கி அண்ணாச்சி உத அண்ணாச்சியோட பின்னூடம் பார்த்து தெறிச்ச மாதிரி தெறிச்சிடுவங்க. முப்பதாயிரமா? உங்க அளவுக்கு எனக்குக் கெட்ட எண்ணமெல்லாம் இல்லீங்க. பதிவு எழுதுனாலும் பாசக்காரன் நான்.

ஆசிப் மீரான் said...

மாயவரத்தான் அண்ணாச்சி

வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
400 இன்னும் வரலை. சீக்கிரம் வந்துடலாம் :-)

மாயவரத்தான்... said...

//மாயவரத்தான் அண்ணாச்சி

வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
400 இன்னும் வரலை. சீக்கிரம் வந்துடலாம் :-)//

ஹிஹி...பதிவை படிக்காம பின்னூட்டம் போட்டா இப்படி தான்!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அண்ணாச்சி,

பதிவுக்கு மேல தேதி 03 JUN 08 என்று காட்டுது. இன்னைக்குத் தேதி 02 தானே !

ஆசிப் மீரான் said...

மாயவரத்தாரே,

ஹிஹிஹி :-) இதெல்லாம் பதிவுல்கத்துல ரொம்ப ஜகஜ்ஜமப்பா :-)

ஜ்யோவ்ராம் அண்ணாச்சி

யாரவது தேதியை சரியா கண்டுபுடிக்கிராங்களான்னு சோதனை வச்சேன். நீங்க ஒரு ஆளுதான் தெளிவா இருக்கீங்க. (யப்பா, என்னல்லம சொல்லி சமாளிக்க வேண்டியிருக்கு)

பினாத்தல் சுரேஷ் said...

//அப்படி எழுதியும் அவர் இவர் என்று அவருக்கு நான் வழங்கும் மரியாதையை. அதுதான் எனக்கும் அவருக்கும் இருக்கும் வித்தியாசம்.//

இதுபற்றி இதுவரை யாரும் கருத்து கூறாததாலும், கருத்து ஏன் கூறவில்லை என்பது புரிந்ததாலும், நானும் கருத்து கூறவில்லை.

உருப்படியா என்பது காபி பேஸ்ட் என்ற உன்னதக்கருத்தைக் கூறிய அசைக்க முடியாத பேராளுமையே, 400க்கு முன்னோட்டம் கண்ணோட்டம் என்று இன்னும் எவ்வளவுதான் ஓட்டுவீர்?

ILA said...

எப்படியா இப்படி உம்மால மட்டும் முடியுது? கலக்கும்வே! மூத்த்த்த்த பதிவரான உம்மை வாழ்த்த வயதில்லை! வணங்கறோமுங்... :)//
Repeateeee

ச்சின்னப் பையன் said...

//மூத்த்த்த்த பதிவரான உம்மை வாழ்த்த வயதில்லை! வணங்கறோமுங்... :)//

என் சார்புலே ஒரு ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்

King... said...

தல வாழ்த்துக்கள்...
தொடர்ந்தும் தமிழ் எழுதும் நல்லுலகம் உங்கள் எழுத்தை வாசிப்பதற்கு உதவவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம்...

மங்களூர் சிவா said...

எங்க என் பின்னூட்டத்த காணம்!?!?!

சரி பரவால்ல மறுக்கா சொல்றேன்

400க்கு வாழ்த்துக்'கள்'

LinkWithin

Blog Widget by LinkWithin